உடல் எடை அதிகரிப்பு: உடல் எடையை குறைக்க நாம் பல வழிகளில் முயற்சி செய்கிறோம். குறிப்பாக தொப்பை வந்துவிட்டால், அதை சரி செய்வது மிக கடினமாகிவிடுகிறது.
உடல் எடையை குறைக்க நமது வாழ்க்கை முறையில் மாற்றங்களை கொண்டு வர வேண்டியது மிக அவசியமாகும். எடை அதிகரிப்பதற்கு உங்கள் உணவே முக்கிய காரணமாகும். அன்றாட வாழ்க்கையில் தேவை இல்லாத, ஆரோக்கியமற்ற உணவை சாப்பிடுவது உங்கள் உடலில் தவறான விளைவை ஏற்படுத்துகிறது. எடை அதிகரிப்பால் பல நேரங்களில் பலர் பல சங்கடங்களுக்கு ஆளாவது உண்டு.
உடல் எடையைக் குறைக்கும் காலை உணவு
உடல் எடை அதிகரிப்பது இன்றைய காலத்தின் பொதுவான பிரச்சனை ஆகிவிட்டது. அதிகரிக்கும் எடையைக் கட்டுப்படுத்த, உணவில் ஆரோக்கியமான மாற்றங்களைச் செய்வது அவசியம். அத்தகைய சூழ்நிலையில், உங்கள் உடலை ஆரோக்கியமாகவும் கட்டுக்கோப்பாகவும் வைத்திருக்கும் உணவுகளை உங்க டயட்டில் சேர்ப்பது மிக அவசியமாகும்.
உணவின் அளவு உங்கள் உடலை மிகவும் பாதிக்கும் ஒரு விஷயம். அதனால்தான் நீங்கள் காலை உணவில் எதைச் சாப்பிட்டாலும் அது உங்கள் உடலில் நேரடி விளைவை ஏற்படுத்துகிறது. இந்த பதிவில் பகிரப்பட்டுள்ள சில காலை உணவுகளை உட்கொண்டால், அது உடல் எடையைக் குறைக்க உதவும். இவற்றை உட்கொள்வதன் மூலம், உங்கள் வயிறு நீண்ட நேரம் நிரம்பிய உணர்வுடன் இருக்கும். இதன் காரணமாக அவ்வப்போது தேவையற்ற, ஆரோக்கியமற்ற உணவுகளை சாப்பிடுவதை தவிர்க்கலாம். உடல் எடையைக் குறைக்க உதவும் சில காலை உணவு வகைகளை பற்றி இங்கே காணலாம்.
எடை இழப்புக்கான காலை உணவுகள்
அவல்
அவல் ஜீரணிக்க மிக லேசான ஒரு உணவாகும். லேசான உணவாக இருந்தாலும், இதை உட்கொள்வதன் மூலம், உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்த உணர்வுடன் இருக்கும். உங்களுக்கு பிடித்த பல காய்கறிகளை சேர்த்து எளிதாக அவல் உப்புமா தயார் செய்யலாம். அல்லது பாலில் ஊற வைத்தும் இதை உட்கொள்ளலாம். இதனை உட்கொள்வதன் மூலம் உங்கள் குடல் ஆரோக்கியம் சிறப்பாக இருக்கும். அதே நேரத்தில், உங்கள் எடையும் கட்டுக்குள் இருக்கும்.
இட்லி / தோசை
காலை உணவுக்குஇட்லி மிக நல்ல சிற்றுண்ட்டியாக கருதப்படுகின்றது. இது மிகவும் லேசான காலை உணவாகும். உடலுக்கு எந்த கெட்ட விளைவுகளையும் ஏற்படுத்தாமல், பல வித சத்துக்களையும் இது அளிக்கின்றது. தோசையும் காலை உணவுக்கு சிறந்தது. இவற்றுடன் காய்கறிகள் அதிகமாக உள்ள சாம்பார் / கொத்சு ஆகியவற்றை சேர்த்து உட்கொண்டால் அனைத்து வித ஊட்டச்சத்துகளும் நிறைந்த ஒரு பரிபூரண காலை உணவாக இது இருக்கும்.
முளை கட்டிய பயறுகள்
முளைத்த பயறுகளில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற பல பண்புகள் நிறைந்துள்ளன. ஆகையால் இவற்றை உட்கொள்வதால் உடல் எடையை எளிதாக குறைக்கலாம். காலை உணவில் லேசாக, ஆனால் ஆரோக்கியமாக ஏதாவது சாப்பிட வேண்டும் என்று நினைப்பவர்கள் முளை கட்டிய தானிய சாட் சாப்பிடலாம்.
ஓட்ஸ்
அதிகரிக்கும் உடல் எடையை கட்டுப்படுத்த வேண்டுமானால், காலை உணவில் பாலுடன் ஓட்ஸ் அல்லது சிறிது காரம் கலந்த ஓட்சை கஞ்சியாக சாப்பிடலாம். ஒன்று முதல் ஒன்றரை கப் ஓட்ஸை காலையில் உட்கொண்டால், உங்கள் வயிறு நீண்ட நேரம் நிறைந்திருக்கும். நீங்கள் விரும்பினால், இதில் உங்களுக்கு பிடித்த காய்கறிகளைச் சேர்த்து சமைக்கலாம்.
முட்டைகள்
முட்டையில் நல்ல அளவு புரதச்சத்து நிறைந்துள்ளது. ஆகையால் எடை குறைக்கும் முயற்சியில் இதற்கு முக்கிய பங்கு உள்ளது. காலை உணவாக முட்டையை வேகவைத்து அல்லது ஆம்லெட் செய்து சாப்பிடலாம்.
கோதுமை ரவை கஞ்சி
கோதுமை ரவை உப்புமா அல்லது கோதுமை ரவை கஞ்சி ஒரு சத்தான காலை உணவாக கருதப்படுகின்றது. அதில் உங்களுக்கு விருப்பமான சில காய்கறிகளைச் சேர்த்து சாப்பிடும் போது அதன் சுவையும் கூடுகிறது. மேலும் ஆரோக்கியத்துக்கும் இது மிகுந்த நன்மை பயக்கிறது. கோதுமை ரவை உப்புமா அல்லது கஞ்சியை காலை உணவாக உட்கொள்வதால் வயிறு நிரம்பி இருக்கிறது, செரிமான பிரச்சனை சீராகிறது. முக்கியமாக இந்த காலை உணவு உடல் பருமனை குறைக்க உதவுகின்றது.
No comments:
Post a Comment