Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 17, 2023

நாள்பட்ட பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ நன்மைகள் கொண்ட குப்பைமேனி



நாள்பட்ட பல்வேறு நோய்களை குணப்படுத்தும் மருத்துவ நன்மைகள் கொண்ட குப்பைமேனி இலையின் பயன்களை இந்த பதிவில் நாம் காணலாம்.

அனைத்து வகையான உங்கள் குணமாக்க குப்பைமேனி இலை பயன்படுகிறது. அந்த வகையில் குப்பைமேனி இலையுடன் மஞ்சள் சேர்த்து அரைத்து பூசினால் உடலில் உள்ள புண்கள் குணமடையும். பாரம்பரிய சித்த மருத்துவத்தில் குப்பைமேனி இலை சாறு குடல் புழுக்களில் இருந்து விடுபட உதவுகிறது‌.

குப்பைமேனி இலை வயிற்றில் இருக்கும் பூச்சிகள் நீக்கும் தன்மை உடையது. அதுமட்டுமில்லாமல் தோல் சம்பந்தப்பட்ட நோய்களையும் குணப்படுத்தும்.

உடல் வலிக்கு குப்பைமேனி இலையை தேங்காய் எண்ணெயுடன் சேர்த்து காய்ச்சி எடுத்து உடலில் தேய்த்து வந்தால் உடலில் ஏற்படும் வலி குணமாகும்.

குப்பைமேனி இலை சாறு மார்புச்சளி, கீழ்வாதம் போன்ற நோய்களையும் குணப்படுத்தும். குறிப்பாக இருமலை கட்டுப்படுத்த சிறந்த மருந்தக குப்பைமேனி பயன்படுகிறது.

குப்பைமேனி இலையை மஞ்சளுடன் சேர்த்து அரைத்து முகத்தில் தடவினால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மற்றும் பருக்கள் மறைந்து முகம் பொலிவாக காணப்படும். மூலநோய் உள்ளவர்கள் குப்பைமேனி இலையை அரைத்து துவையல் போல சமைத்து சாப்பிட்டு வந்தால் மூலநோய் விரைவில் குணமாகும்.

குப்பைமேனி இலையை விளக்கெண்ணெய் விட்டு நன்றாக வதக்கி இளஞ்சூட்டில் கட்டி வர படுக்கை புண்கள் குணமாகும். மேலும் குப்பைமேனி இலையுடன் சிறிது மஞ்சள் உப்பு வைத்து அரைத்து உடலில் தேய்த்து குளித்தால் தோல் நோய்கள் அனைத்தும் குணமாகும்.

பூச்சிகளினால் ஏற்படும் விஷக்கடி, ரத்தம் மூலம், வாத நோய், ஆஸ்துமா, குடற்புழுக்கள், மூட்டு வலி, தலைவலி போன்ற அனைத்து விதமான நோய்களையும் குணப்படுத்தும் தன்மை குப்பைமேனி இலைக்கு உள்ளது.

No comments:

Post a Comment