Monday, June 12, 2023

நீரிழிவு நோய் இருப்பவர்கள் அரிசி சாப்பிடலாம் தெரியுமா..?

நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டு இருப்பவர்கள் அதிக ஸ்டார்ச் இருக்கும் உணவுகளை தவிர்க்க வேண்டும்.

குறிப்பாக இந்திய உணவுப் பழக்கத்தில் அரிசிக்கு பிரத்தியேகமான இடம் இருக்கிறது! எனவே சக்கரை நோய் பாதிப்பு இருப்பவர்கள் அரிசியைத் தவிர்த்துவிட்டு அல்லது அரிசி சாப்பிடுவதை குறைத்து, சிறுதானியங்கள் அதிகம் சாப்பிடுமாறு பரிந்துரைக்கப்படுகிறது. அரிசி உணவுகளை சாப்பிட்டால் ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகரித்து, கட்டுக்குள் வைக்க முடியாமல் போகும் அபாயம் இருக்கிறது. ஆனால், நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு நற்செய்தி!

அரிசி உணவை சாப்பிட்டால் கூட ரத்தத்தில் சர்க்கரை அதிகரிக்காமல் பார்த்துக் கொள்ள முடியும். இதற்கு ரெஸிஸ்டன்ஸ் ஸ்டார்ச் என்று அரிசியில் இருக்கும் ஒரு வகையான ஸ்டார்ச் உதவுகிறது. இது பற்றி முழு விவரங்களை இங்கே பார்க்கலாம்.

நீரழிவு நோய் என்றாலே, கார்போஹைட்ரேட் உணவுகளை தவிர்க்க வேண்டும் என்பது தான் முதன்மையாக பேசப்படும். அரிசி மட்டுமல்ல, உருளைக்கிழங்கு உள்ளிட்ட கிழங்கு வகைகளையும் தவிர்க்க வேண்டும். ஆனால், உடலுக்கு தேவையான 50 சதவிகித எனர்ஜியை கார்ப் உணவுகளில் இருந்து தான் பெற வேண்டும். எனவே,நீரிழிவு நோயாளிகள் கூட மாவுச்சத்து உணவுகளை தான் உட்கொள்கிறார்கள். இருப்பினும், சர்க்கரை நோய் அதிகரிக்காமல், உடலுக்கு எனர்ஜி கொடுக்கும் கார்ப் உணவின் ஒரு வகை தான் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் என்று கூறப்படுகிறது.

இந்த ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச்சை உடலில் சுரக்கும் கேஸ்ட்ரிக் என்சைம்களால் உடனடியாக செரிமானம் செய்ய முடியாது. எனவே, இவை உடலுக்கு அப்சார்ப் ஆவதற்கும், செரிமானம் ஆவதற்கும் நீண்ட நேரம் ஆகும். வயறு, சிறுகுடல் ஆகிய பகுதிகளில் செரிமானம் ஆகாமல், பெருங்குடலுக்கு செல்லும். பெருங்குடலில் இருக்கும் பாக்டீரியாவால் செரிமானம் செய்யப்படும். இன்னும் எளிதாக கூற வேண்டுமானால், இது, டயட்டரி ஃபைபர் போல செரிமானம் ஆகும்.

அதாவது, கார்போஹைட்ரேட் உணவுகள் குளுக்கோஸாக மாறுவதற்காக பதிலாக ஸ்டார்ச்சாக மாறினால் நீரிழிவு நோயாளிகளை பாதிக்காது.

குளுக்கோஸ் vs ஸ்டார்ச் : குளுக்கோஸ் என்பது சிங்கிள் சுகர் மாலிக்யூல் ஆகும். இதை குடலில் இருந்து உடல் நேரடியாக அப்சார்ப் செய்து கொள்ளும். ஆனால், இதுவே ஸ்டார்ச் ஆக இருந்தால், அதை பெருங்குடல் சிம்பிள் மாலிக்யூலாக உடைத்த பின்னர் தான் உடல் அப்சார்ப் செய்யும். எனவே, குளுக்கோசைப் போல இது விரைவாக நடக்காது. சாப்பிட்ட பின்பு உடனடியாக குளுக்கோஸாக மாறவில்லை என்றால், அது சர்க்கரை அளவை உடனடியாக அதிகரிக்காது.

சரி, ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் எதில் இருக்கிறது?

ஒரு சில உணவுகளில் இயற்கையாகவே ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் உள்ளது. சில உணவுகளில், அதை சமைக்க தயார் செய்யும் விதத்திலும், சமைக்கும் விதத்திலும், ஸ்டோர் செய்வதன் மூலம், ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச்சாக மாறும்.


முழு செரியல்கள்

பருப்பு வகைகள்

சிறு தானியங்கள்

வாழைக்காய்

வாழைத்தண்டு

பூமிக்கு அடியில் விலையும் காய்கறிகள்

பழங்கள்

ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச் குறைவான கிளைகெமிக் இன்டக்ஸ் கொண்டுள்ளது. எனவே, மக்கா சோளம், அரிசி, உருளைகிழங்கு, மரவள்ளி கிழங்கு மற்றும் கோதுமைக்கு மாற்றாக பயன்படுத்தலாம். உணவில் தேவைப்படும் முழு கார்போஹைட்ரேட்டுக்கு பங்களிக்கும் என்பதால், உடலுக்கு தேவையான எனர்ஜியும் கொடுக்கும்.

உணவுகளில் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச்சை எப்படி அதிகரிப்பது :

உணவுகளில் ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச்சை அதிகப்படுத்த சில வழிகள் உள்ளன. இதில், ரெட்ரோகிரேடேஷன் (RETROGRADATION) என்ற ஒரு வழி இருக்கிறது. இந்த வழியில், உணவை சமைத்து குளிர்விப்பதன் மூலம், ஸ்டார்ச் மாலிக்யூல்ஸ் இயங்கும். உதாரணமாக, தண்ணீரில் அரிசியை சமைக்கும் போது, ஸ்டார்ச் ஜெலட்டின் போல மாறும். அரசி தண்ணீரை உறிஞ்சும். அதை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுத்தால், தண்ணீர் மாலிக்யூல்கள் அதிலிருந்து வெளியேறும்; மாறாக ஸ்டார்ச் மாலிக்யூல்கள், கிர்ஸ்டல் வடிவில் மறுசீரமைக்கப்படும். இந்த ஸ்டார்ச் மாலிக்யூல்களை என்சைம்களால் உடைக்க முடியாது. எனவே, இவை உடனடியாக செரிமானம் ஆகாது.

இதனால், சூடான அரிசி சாதத்தை விட, பழைய சாதத்தில் அதிக ஸ்டார்ச் இருக்கிறது. ஸ்டார்ச் உணவை சமைத்து, அதனை குளிர்விப்பதன் மூலமாக, ரெசிஸ்டன்ட் ஸ்டார்ச்சைப் பெறலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News