Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, June 25, 2023

பொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியீடு


பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் நாளை வெளியிடப்படவுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தின்கீழ் இயங்கும் 450-க்கும் அதிகமான பொறியியல் கல்லுாரிகளில் 1.54 லட்சம் இளநிலை பட்டப்படிப்பு இடங்கள் உள்ளன. இந்தஇடங்களில் 2023–24 கல்வியாண்டு மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பப் பதிவு, மே 5 முதல் ஜூன்4-ம் தேதி வரை நடைபெற்றது. மொத்தம் 2 லட்சத்து 29 ஆயிரத்து 167 விண்ணப்பங்கள் பதிவாகின. ஒரு லட்சத்து 55 ஆயிரத்து 124 பேர் சான்றிதழ்களை பதிவேற்றம் செய்திருந்தனர்.

இவர்களுக்கான சான்றிதழ் சரிபார்ப்புப் பணிகள் கடந்த 20-ம்தேதி நிறைவடைந்தது. இந்நிலையில், பொறியியல் கலந்தாய்வு தரவரிசைப் பட்டியல் நாளை (ஜூன் 26) வெளியாக உள்ளது. மாணவர்கள், தரவரிசைப் பட்டியலை www.tneaonline.org என்ற இணையதளத்தில் அறியலாம். தரவரிசை தொடர்பாக புகார்கள் தெரிவிக்க ஜூன் 30-ம் தேதி வரை மாணவர்களுக்கு அவகாசம் வழங்கப்படுகிறது. இதைத் தொடர்ந்து ஜூலை 2-ல் கலந்தாய்வு தொடங்குகிறது.

No comments:

Post a Comment