Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, July 23, 2023

ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பு சங்க பொறுப்பாளர்களுடன் பள்ளிக்கல்வி இயக்குநர் பேச்சுவார்த்தை - 25.07.2023


தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பின் சார்பில் பல்வேறு கோரிக்கைகள் சார்ந்து தங்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்திட கோரிய வண்டுகோள் கடிதம் பார்வையில் காணும் கடிதத்தின் வழியாக பெறப்பட்டுள்ளது.

சங்கங்களின் மேற்கண்ட கோரிக்கையினை ஏற்று பள்ளிக் கல்வி இயக்குநர் தலைமையில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் உள்ள ஆசிரியர் பொறுப்பாளர்களுடன் 25.07.2023 முற்பகல் 10.30 மணியளவில் பேச்சுவார்த்தை நடைபெறவுள்ளதால் அன்றைய தினம் மேற்கண்ட சங்கங்களின் பிரதிநிதிகள் கலந்து கொள்ள தெரிவிக்கப்படுகிறது.

இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஆசிரியர் சங்கங்களின் கூட்டமைப்பில் இணைந்துள்ள ஒவ்வொரு சங்கத்தின் சார்பாக ஒருவர் மட்டுமே கலந்து கொள்ளவும் , தங்களது சங்கத்தின் சார்பாக கருத்துருக்களை தெரிவிக்கவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

மேலும் தங்களது கருத்துக்கள் சார்பான விவரங்களை கூட்டம் நடைபெறும் நாளன்று அதன் நகலொன்றினை நேரில் சமர்ப்பிக்கவும் , dse@tnschools.gov.in என்ற முகவரிக்கு இ - மெயில் வழியாக Soft Copy அனுப்பிடவும் தெரிவிக்கப்படுகிறது.

No comments:

Post a Comment