மூலம் (HEMORROIDS), என்பது ஆசன வாயிலுள்ளும், வெளியிலும் தேவையற்ற சதைகள் வளர்ந்து குத வாயிலை அடைத்துத் துன்புறுத்துவக்கூடியது.
மூல நோய் மலச் சிக்கலாலும், மரபு வழியாகவும் தோன்றக் கூடியது. மூல நோயை உள்மூலம், ( Internal piles ), வெளிமூலம் ( External piles ), பவுத்திர மூலம் ( Fistula ) மூன்று வகைகள் உள்ளது.
காரணங்கள்:
1. மலச்சிக்கல் மூலநோய்க்கு முக்கியக் காரணம்.
2. ஆண்களுக்கு ஏற்படுகிற சிறுநீர்த்தாரை அடைப்பு, புராஸ்டேட் வீக்கம் போன்றவற்றாலும் இம்மாதிரி அழுத்தம் அதிகமாகி மூலநோய் உண்டாகிறது.
3. வயிற்றில் உருவாகும் கட்டிகள், மலக்குடலில் உருவாகும் புற்றுநோய்க் கழலைகள் மற்றும் கொழுத்த உடல் போன்றவையும் மூலநோயை ஏற்படுத்தும்.
4. கர்ப்பிணியின் வயிற்றில் குழந்தை வளர வளர அடிவயிற்றில் இருக்கும் உறுப்புகள் கீழ்நோக்கித் தள்ளப்படுவதால், அவை ஆசனவாய் சிரைக்குழாய்களை அழுத்தி வீக்கத்தை ஏற்படுத்தும். இதன் காரணமாக சில பெண்களுக்கு கர்ப்பகாலத்தில் மட்டும் தற்காலிகமாக மூலநோய் வருகிறது.
5. சிலருக்குப் பரம்பரை காரணமாக ஆசனவாயில் உள்ள சிரைக்குழாய்கள் மிக மெல்லியதாக இருக்கும். இதனாலும் மூலநோய் வரலாம்.
6. புகைபிடிப்பதும் மது அருந்துவதும் போதைப்பொருள்களை உபயோகிப்பதும் ரத்தக்குழாய்களைப் பாதிப்பதால், இப்பழக்கம் உள்ளவர்களுக்கு மூலநோய் எளிதில் வந்துவிடும்.
எனவே எந்த வகையான மூலநோயாக இருந்தாலும் ஐந்தே நாளில் சரி செய்யக்கூடிய ஒரு பாட்டி வைத்தியத்தை இங்கு தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்:
சின்ன வெங்காயம்
நல்லெண்ணெய்
உப்பு
சாதம்
செய்முறை:
1. 15லிருந்து 20 சின்ன வெங்காயங்களை தோல் நீக்கி கழுவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
2. அடுத்து அடுப்பை பற்ற வைத்து அதில் ஒரு கடாயை வைத்து கடாயில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு அதனுடன் சிறு சிறு துண்டுகளாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்க்கவும்.
3. இப்போது அதில் சிறிதளவு உப்பு சேர்த்து வெங்காயத்தை நன்றாக நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
4. வெங்காயம் நன்கு வதங்கிய பின்னர் ஒரு சிறிய கப் அளவு சாதத்துடன் சிறிதளவு வதக்கிய வெங்காயத்தை சேர்த்து நன்கு பிசைந்து சாப்பிடவும்.
இவ்வாறு வதக்கிய வெங்காயத்துடன் பிசைந்த சாதத்தை மதியம் சாப்பிடுவதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பாக சாப்பிடவும். இவ்வாறு ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து சாப்பிட்டு வர எந்த வகையான மூல நோயாக இருந்தாலும் உடனடியாக குணமாகும்.
No comments:
Post a Comment