Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 7, 2023

மருதாணி சிவக்க மட்டுமல்ல சிறந்த மருத்துவத்துக்கும் கூட...



அழகையும் ஆரோக்யத்தையும் இயற்கை கொடுக்கும் பொருள்களிலிருந்தே பெற்று வாழ்ந்துவந்தவர்கள் முன்னோர்கள்.

மருதாணியின் சிவப்பைப் பெண்களின் நாணத்தோடு ஒப்பிடுவார்கள். மருதாணி இலையை புளி, கொட்டப்பாக்கு வைத்து அரைத்து கைவிரல்க ளிலும், உள்ளங்கை நடுவிலும் வைத்து மறுநாள் காலை காய்ந்தவுடன் கைகளைக் கழுவி தேங்காய் எண்ணெய் சொட்டு தடவி தேய்த்து அழகு பார்ப்பார்கள். வாசம் பிடிப்பார்கள் பெண்கள்.

இராமயணத்தில் இராவணனால் கவரப்பட்ட சீதை இலங்கையில் இருந்த போது சீதையின் அருகிலிருந்த மருதாணி மரங்கள் குளிர்ந்த காற்றை வீசியது. கவலை தோய்ந்த சீதையின் மனத் துக்கு இதமான வருடலைத் தந்தது. பிறகு சீதை மீட்கப்பட்டாலும் மருதாணியின் குளிர்ந்த காற்றை யும் வாசத்தையும் மறக்காத சீதை, மருதாணியை பெண்கள் இட்டுக்கொண்டால் வாழ்வில் சகல செளபாக்கியங்களையும் பெற்று வாழ்வார்கள் என்று வரமளித்தாள்.

இப்போது கிடைக்கும் மெஹந்தி கோன்கள் எல்லாமே மருதாணி சிவப்புக்கு பக்கத்தில் கூட நிற்க முடியாது என்பதுதான் உண்மை.கெமிக்கல் கலப்பில் உருவாகும் கோன் மெஹந்திகளின் நிறம் மருதாணி சிவப்பையும், மருதாணி வாசத்தையும் கொண்டிருக்காது என்பதோடு ஒரு கறு நிறத்தைக் கொடுக்கும்.

சித்தமருத்துவத்தில் மருதாணியின் விதை, இலை, பூ, காய், வேர், பட்டை அனைத்தும் பயன்படுத்தப்படுகிறது. இது மருதோன்றி, ஐவணம், அழ வணம் என்னும் வேறு பெயர்களிலும் அழைக்கப்படுகிறது. இன்று இளநரை என்னும் பிரச்னையால் பாதிப்படைபவர்களுக்கு நிரந்தர தீர்வை அளிக்கும் அருமருந்தாக மருதாணி இருக்கிறது என்றும் சொல்லலாம்.

மருதாணி சிவக்க மட்டுமல்ல சிறந்த மருத்துவத்துக்கும் கூட என்பதைப் பற்றி தெரிந்துகொள்வோமா:

உடல் உஷ்ணம் அதிகமிருப்பவர்கள் மாதம் ஒரு முறை மருதாணி இலையை அரைத்து கை விரல்களில் பூசி வந்தால் நகங்களில் உள்ள கிருமி கள் மறையும். நகச்சுற்று அவதிகள் இருக்காது. நகங்களும் அழகாக இருக்கும்.

ஒற்றைத்தலைவலி பிரச்னையால் அவதிப்படுபவர்கள் மருதாணி இலையை அரைத்து நெற்றியில் பற்றுப்போட்டால் தலைவலி குணமாகும். அடிக்கடி தலைவலியால் அவதிப்படுபவர்கள் மருதாணியை காயவைத்து பொடியாக்கி காற்றுப்புகாத டப்பாவில் வைத்து அடைத்து வேண்டிய போது பயன்படுத்திக்கொள்ளலாம்.

மருதாணியை இலையை அரைத்து நிழலில் உலர்த்தி தேங்காய் எண்ணெயில் சேர்த்து தலைக்கு தேய்த்து வந்தால் பித்த நரையும் இளநரையும் நாளடைவில் மறையும். தலையில் பேன் தொல்லைகள் இருந்தால் மருதாணி இலையை தலையணை உறையில் வைத்து அதன் மேல் படுத்து உறங்கினால் பேன் தொல்லை நிரந்தரமாக ஒழியும். பொடுகும் தீரும்.

மருதாணி வைத்தால் சிவப்பழகு மட்டுமல்ல மனநோய் தீர்ந்து மன அழகும் உண்டாகிறது. சருமங்களில் உண்டாகும் அரிப்பு, தேமல், சொறி, சிரங்கு போன்ற அனைத்து பிரச்னைகளையும் தீர்க்க வல்லது மருதாணி. சருமத்தில் உண்டாகும் சுருக்கங்களை நீக்கி என்றும் இளமையான தோற்றத்தைக் கொண்ட சருமத்தைக் கொடுக்கிறது மருதாணி.

மருதாணி வெளிப்பூச்சு மருந்தாக மட்டுமல்ல உள்ளுக்கும் கொடுக்கலாம். தீராத வயிற்றுவலி பிரச்னை இருப்பவர்கள் மருதாணி சாறை வெறும் வயிற்றில் ஒரு டீஸ்பூன் குடித்தால் வலி பறந்து போகும். இரத்தம் சேர்ந்து கழியும் சீதபேதிக்கு அருமருந்து மருதாணி சாறு. மருதாணி இலை களை நீரில் ஊறவைத்து அந்த நீரை குடித்தால் உடலில் இருக்கும் நச்சுகள் முழுமையாக வெளியேறும்.

மருதாணி உடலுக்கு குளிர்ச்சியை உண்டாக்கும் என்பதால் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அதிக நேரம் கைகளில் வைப்பதைத் தவிர்ப்பது நல்லது. மேற்சொன்ன நன்மைகள் எல்லாமே இயற்கையாய் வளர்ந்திருக்கும் மருதாணி செடிகளிலிருந்து பறித்து பயன்படுத்தப்படும் இலைகளுக்கு மட்டுமே பொருந்தும். கெமிக்கல் கலந்த கோன் மருதாணிகள் ஆரோக்யத்தைக் கொடுக்காது. ஆரோக்யத்தை குறைக்கவே செய் யும். மருதாணி சிவப்பும் வாசமும் இம்மியளவும் கொடுக்காது கோன் மருதாணி...

No comments:

Post a Comment