Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, August 9, 2023

தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2வது சுற்று பொது கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது..!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழ்நாட்டில் பொறியியல் மாணவர் சேர்க்கைக்கான 2வது சுற்று பொது கலந்தாய்வு ஆன்லைனில் தொடங்கியது. 2ம் கட்ட கலந்தாய்வில் 64,228 மாணவ, மாணவியர் பங்கேற்றுள்ளனர். தரவரிசையில் 22,763 முதல் 87,049 வரை உள்ள மாணவர்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது. www.tneaonline.org என்ற இணையதளம் வழியாக ஆன்லைன் கலந்தாய்வில் மாணவர்கள் பங்கேற்கலாம். 2ம் கட்ட கலந்தாய்வில் 3நாட்களுக்கு மாணவர்கள் தங்கள் விருப்பமான கல்லூரி, படிப்புகளை தேர்வு செய்யலாம். 176.99 கட் ஆஃப் முதல் 142 கட் ஆஃப் வரை உள்ள மாணவர்கள் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்றுள்ளனர்.

7.5% அரசு ஒதுக்கீட்டில் சேரவுள்ள 7,511 மாணவர்களும் இரண்டாம் கட்ட கலந்தாய்வில் பங்கேற்கவுள்ளனர். கலந்தாய்வில் பங்கேற்கும் மாணவர்களுக்கு உதவ 110 இடங்களில் மாணவர் சேர்க்கை உதவி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 1.78 லட்சம் மாணவ, மாணவிகளுக்கான தரவரிசை பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது. இளநிலை பொறியியல் படிப்புகளில் சேர 1.87 லட்சம் மாணவ, மாணவியர் விண்ணப்பித்துள்ளனர். முதற்கட்ட பொது கலந்தாய்வில் 22,761 மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News