Wednesday, August 30, 2023

மதிப்பீட்டு புலம் - வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டி காணொளி!!!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

மதிப்பீட்டு புலம் - 6 முதல் 9 வகுப்பு வரை கற்றல் விளைவு/ திறன்வழி மதிப்பீட்டு தேர்வு.

🫐அனைத்து அரசு பள்ளிகள்(நடுநிலை,உயர்நிலை & மேல்நிலைப் பள்ளிகள்) 6 முதல் 9 வகுப்பு மாணவர்களுக்கு *கற்றல் விளைவு/திறன்வழி மதிப்பீட்டு தேர்வு நடத்த வேண்டும்.

🫐 கால அட்டவணை

6ஆம் வகுப்பு - 29.08.2023

7 ஆம் வகுப்பு - 30.08.2023

8 ஆம் வகுப்பு - 31.08.2023

9 ஆம் வகுப்பு- 01.09.2023


🫐மதிப்பீட்டு தேர்வுகளுக்கான வினாத்தாள்கள் அனைத்தும் மாநில மதிப்பீட்டு புலம் வழியாக https://exam.tnschools.gov.in என்ற இணையதளத்தில் முன்கூட்டியே பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

🫐தேர்வு நடைபெறும் நாளுக்கு ஒரு நாள் முன்பாக பிற்பகல் 2 மணி முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்திட வேண்டும்.

🫐வினாத்தாள்களை பதிவிறக்கம் செய்யும்போது ஏற்படும் சிக்கல்களுக்கு தீர்வு காண 14417 என்ற கட்டணமில்லா தொலைபேசி சேவையை ஆசிரியர்கள் பயன்படுத்த வேண்டும்.

🫐தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்னதாகவே பள்ளிக் கல்வித் துறையின் சார்பில் அனைத்து அரசு பள்ளிகளுக்கும் வழங்கப்பட்டுள்ள அச்சுப் பொறியை(Printer) பயன்படுத்தி மாணவர்களின் எண்ணிக்கை ஏற்ப வினாத்தாள்களை வகுப்பாசிரியர்கள் அச்சிட்டு வைத்திருக்க வேண்டும்.

🫐ஒவ்வொரு கற்றல் விளைவு திறன் வழி மதிப்பீட்டு தேர்வையும் 40 மணித்துளி களில் நிறைவு செய்ய வேண்டும்.

🫐ஒவ்வொரு தேர்வும் 25 ஒரு மதிப்பெண் கொள் குறி வகை வினாக்களை கொண்டிருக்கும்.

🫐ஒவ்வொரு மாணவருக்கும் தனித்தனியே அச்சடித்த வினாத்தாள்களை வழங்கி அதற்கான விடைகளை தாளிலேயே மாணவர்களை குறிப்பிட செய்ய வேண்டும். இத்தேர்வை வகுப்பாசிரியர் அவரது பாட வேளையில் தேர்வு நாள் அன்று தவறாமல் நடத்த வேண்டும்.


🫐இத்தேர்வுக்கான வினாக்கள் அந்தந்த வகுப்புகளுக்கான தமிழ், ஆங்கிலம், கணிதம்,அறிவியல் மற்றும் சமூக அறிவியல் ஆகிய பாடங்களுக்காக அந்நாள் வரை வகுப்பறையில் கற்பிக்கப்பட்ட கற்றல் விளைவுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.

🫐எவ்வித குறிக்கீடும் இன்றி மாணவர்கள் தாங்களாகவே விடைத்தெரிவுகளை மேற்கொள்வதை தலைமை ஆசிரியர்களும் வகுப்பு ஆசிரியர்களும் உறுதி செய்ய வேண்டும்.

🫐மாணவர்கள் விடையளித்த வினாத்தாள்களை மீண்டும் பெற்று மதிப்பெண்ணிட்டு வகுப்பு ஆசிரியர்கள் பராமரிக்க வேண்டும்.

🫐தேர்வுக்கு பின்வரும் கற்பித்தல் நாட்களில் இவ்வினாத்தாள்களில் இடம்பெற்றிருக்கும் வினாக்கள், வினா அமைப்பு, தேர்வுகளில் இவ்வகை வினாக்கள் எதிர்கொள்ளும் முறை குறித்து தாங்கள் கற்பிக்கும் பாடத்தின் ஊடாக அனைத்து ஆசிரியர்களும் தங்கள் வகுப்பறையில் மாணவர்களுடன் தொடர்ச்சியாக கலந்துரையாட வேண்டும்.

🫐*மாதம் ஒருமுறை என 6 முதல் 9 வகுப்பு வரை அனைத்து அரசு பள்ளிகளிலும் கற்றல் விளைவு/திறன் வழி மதிப்பீட்டு தேர்வுகள் நடைபெறுவதை தலைமை ஆசிரியர்கள் உறுதி செய்திட கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

*வினாத்தாள் பதிவிறக்கம் செய்வதற்கான வழிகாட்டி காணொளி

Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application