Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, August 29, 2023

வேலைதேடி அலைபவர்களுக்கு முக்கிய அறிவிப்பு

கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு சிறப்பு தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமானது செப்டம்பர் இரண்டாம் தேதி செங்கல்பட்டு மாவட்டம் பல்லாவரம் வட்டத்தில் உள்ள வேல்ஸ் அறிவியல் தொழில்நுட்பம் நிறுவனத்தில் நடைபெற உள்ளது .

மாவட்ட நிர்வாகம் மாவட்ட வேலைவாய்ப்பு தொழில் வழிகாட்டுதல் மையம் இணைந்து நடத்த உள்ளது .இந்த முகாமில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட துறையின் நிறுவனங்கள் கலந்து கொண்டு தேவைக்கேற்ற நபர்களை தேர்வு செய்ய உள்ளார்கள்.

இந்த வேலை வாய்ப்பு முகாமில் 8, 10 மற்றும் 12ஆம் வகுப்பு பட்டப்படிப்பு, BE, ஐடிஐ, செவிலியர்கள் மாற்றுத்திறனாளிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள். 18 வயது முதல் 40 வயது வரை உள்ள அனைவரும் தங்களுடைய கல்வி சான்றிதழ் பாஸ்போர்ட் அளவுடைய புகைப்படத்துடன் காலை 9 மணி முதல் மாலை 3 மணி வரை கலந்து கொள்ளலாம். 

மேலும் இந்த முகாமில் கலந்து கொள்ள உள்ளவர்கள் https://tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளது

No comments:

Post a Comment