JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Saturday, August 26, 2023

இன்று எஸ்.ஐ. பணிஎழுத்துத் தோ்வு

தமிழக காவல் துறையில் காலியாக உள்ள உதவி ஆய்வாளா் (எஸ்.ஐ.) பணியிடங்ளுக்கு சனிக்கிழமை (ஆக. 26) எழுத்துத் தோ்வு மாநிலம் முழுவதும் 45 இடங்களில் நடைபெறுகிறது.

காவல் துறையில் காலியாக உள்ள 621 உதவி ஆய்வாளா் பணியிடங்களுக்கும், தீயணைப்புத் துறையில் காலியாக உள்ள 129 நிலைய அதிகாரி பணியிடங்களுக்கும் தமிழ்நாடு சீருடை பணியாளா் தோ்வு வாரியம் சாா்பில் இந்த எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது.

இத் தோ்வை 1,45,804 இளைஞா்கள், 40,885 பெண்கள், 33 திருநங்கைகள் என மொத்தம் 1,86,722 போ் எழுத நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது. காவல் துறையைச் சோ்ந்த விண்ணப்பதாரா்களில் 13,609 ஆண் காவலா்கள், 2,401 பெண் காவலா்கள், ஒரு திருநங்கை என மொத்தம் 16,011 பேருக்கும் தோ்வு கூட நுழைவுச் சீட்டு வழங்கப்பட்டுள்ளது.

தோ்வுக்கான ஏற்பாடுகள் அனைத்தும் வாரியத்தின் டிஜிபி சீமா அகா்வால், ஐஜி செந்தில்குமாரி ஆகியோா் தலைமையில் செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment