ஆசிரியர் கல்வியியல் டிப்ளமா தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியாகின்றன.
இதுகுறித்து, அரசு தேர்வுத் துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
ஆசிரியர் கல்வி பயிற்சி நிறுவனங்களில், டிப்ளமா ஆசிரியர் படிப்புக்கான தேர்வு ஜூன், ஜூலை மாதங்களில் நடத்தப்பட்டன. தேர்வு முடிவுகள் வரும், 27ம் தேதி பிற்பகல் 3:00 மணிக்கு வெளியிடப்படும். அரசு தேர்வுத்துறையின், http://www.dge.tn.gov.in/ என்ற இணையதளத்தில் முடிவுகளை தெரிந்து கொள்ளலாம்.
மதிப்பெண்களை மறுகூட்டல் செய்யவும், மறுமதிப்பீட்டுக்காக விடைத்தாள் நகல் பெறவும், இந்த இணையதளம் வாயிலாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, அக்., 5 மாலை 5:00 மணிக்குள், உரிய கட்டணம் செலுத்தி, ஆன்லைனில் பதிவேற்ற வேண்டும். விடைத்தாள் நகல் பெற்றால் மட்டுமே, மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க முடியும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Subscribe Us
JOIN OUR SOCIAL MIDEAS
PG TRB ONLINE TEST LINKS
Monday, September 25, 2023
ஆசிரியர் டிப்ளமா தேர்வு: நாளை மறுநாள் ரிசல்ட்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment