Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, September 21, 2023

சூரியனால் உச்சம் செல்ல போகும் ராசிக்காரர்கள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
ஜோதிட சாஸ்திரத்தின் படி நவக்கிரகங்களின் தலைவனாக விளங்கக்கூடியவர் சூரிய பகவான். ஒவ்வொரு கிரகங்களின் நகர்வுகளை பொறுத்து ஒருவரின் ஜாதகம் அமைவதாக ஜோதிட சாஸ்திரம் கூறுகிறது.

சூரிய பகவான் தனது சொந்த ராசியான சிம்ம ராசியில் பயணம் செய்துவிட்டு தற்போது கன்னி ராசிக்குள் நுழைந்துள்ளார். பல்வேறு விதமான யோகங்கள் உருவானாலும் தற்போது சூரிய பகவானால் ராஜயோகம் உருவாகியுள்ளது. இதனால் பலன்களைப் பெறப்போகும் ராசிகள் குறித்து இங்கே காண்போம்.

மேஷ ராசி

உங்களுக்கு சாதகமான சூழ்நிலை உண்டாகப் போகின்றது. எடுத்த காரியம் அனைத்தும் நிறைவேற அதிக வாய்ப்புள்ளது. மற்றவர்களிடத்தில் மரியாதை அதிகரிக்கும். எதிர்பாராத நேரத்தில் பணவரவு உண்டாகும். அதிர்ஷ்டம் உங்களைத் தேடி வரும். தன்னம்பிக்கை அதிகரிக்கும்.

கடக ராசி

மங்களகரமான வாழ்க்கை உங்களுக்கு அமையப் போவதாக கூறப்படுகிறது. கிரகங்களின் இடமாற்றம் உங்களுக்கு சாதகமாக அமைய உள்ளது. நல்ல பலன்கள் உங்களைத் தேடி வரும். புதிய முதலீடுகள் வெற்றியை பெற்று தரும். வேலை சம்பந்தப்பட்ட விஷயங்களில் முன்னேற்றம் உண்டாகும். தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும்.

துலாம் ராசி

ராஜயோகத்தை சூரிய பகவானால் நீங்கள் பெற்றுள்ளீர்கள் பண வரவிற்கு எந்த குறையும் இருக்காது. நீண்ட நாட்களாக இருந்த தொல்லைகள் விலகும். வருமானத்தில் இந்த குறையும் இருக்காது. தொழில் மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும். உடல் ஆரோக்கியத்தில் முன்னேற்றம் இருக்கும்.

பொறுப்புத் துறப்பு: மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவல்களை அனைத்தும் பொதுவான கணிப்பில் கொடுக்கப்பட்டுள்ளன. தேவை இருப்பின் சரியான நிபுணரை அணுகி தெளிவாக தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News