Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, October 25, 2023

அரசு பள்ளி 2024ல் கணினி பள்ளி ...

Add This Number In Your Whatsapp Groups -6379884356
கணினி ஆசிரியர்களின் நீண்ட நாள் துயர்க்கு முற்றுப்புள்ளி வைக்கும் திருச்சி செயற்கூட்டம். அரசு பள்ளி 2024ல் கணினி பள்ளி ...

கணினி ஆசிரியர்கள் செயற்குழு கூட்டம் திருச்சி ஆசிரியர் இல்லத்தில் நடைபெறுகிறது அனைத்து மாவட்ட கணினி ஆசிரியர்களும் தவறாமல் கலந்து கொள்ள வேண்டுகிறோம்.

(கணினி ஆசிரியர்கள் மீது அரசின் கடைக்கண் பார்வை கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது).

நாள்:28.10.2023 (வருகின்ற சனிக்கிழமை).

நேரம்:காலை 10 மணி.

இடம்: திருச்சி ஆசிரியர் இல்லம்.


முகவரி:

ஆசிரியர் இல்லம், பிளாக் எண்.36, கஸ்தூரி மஹால் சாலை, கோ.அபிஷேகபுரம், திருச்சிராப்பள்ளி,
(புதிய வேலைவாய்ப்பு அலுவலகம் அருகில்),
(கேம்பியன் ஆங்கிலோ இந்திய மேல்நிலைப் பள்ளி எதிர் சாலையில்).

மகிழ்வான செய்தி:

"அரசுப்பள்ளி இனி கணினி பள்ளி" பற்றியும்,

கலைஞர் அவர்களின் நீண்ட நாள் கனவை நினைவாக்கிடவும்,

கணினி ஆசிரியர்களுக்கான

பணிவாய்ப்பு மற்றும் எதிர்காலத் திட்டமிடல் குறித்து இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்க இருக்கின்றோம்.


இக்கூட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக ஆசிரியர் மனசு திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் மதிப்பிற்குரிய திருமிகு.

"சிகரம் சதிஷ்குமார் "அவர்கள் கலந்துகொள்கின்றார் என்பதையும் மகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கின்றேன்.

புரிந்து கொள்வீர்!!!

2024ஆம் கல்வியாண்டில் "வேலையில்லா பட்டதாரி " என்ற பெயர் நீக்கப் பெற உள்ளது.


திரு வெ. குமரேசன் மாநில பொதுச் செயலாளர்,
தொடர்பு எண்: 8248922685,
9626545446,9791756026
தமிழ்நாடு பிஎட் கணினி அறிவியல் வேலையில்லா பட்டதாரி ஆசிரியர் சங்கம்.655/2014.

No comments:

Post a Comment

Popular Feed