சிப்கோ இயக்கம் |
களவினால் ஆகிய ஆக்கம் அளவிறந்து
ஆவது போலக் கெடும்.
விளக்கம்:
திருடுவதால் வரும் செல்வம், பெருகுவது போலத் தோன்றி விரைவில் அழியும்.
இரண்டொழுக்க பண்புகள் :
2. எனவே தேவையில்லாத பேச்சை குறைத்து அமைதி காக்க முயல்வேன்.
பொன்மொழி :
ஒத்த மனமுடையவர்கள் சேர்ந்தால், கடலையும் வற்ற வைக்கலாம்.- இந்தியா
பொது அறிவு :
1. சிப்கோ இயக்கத்தை தொடங்கியவர்-
English words & meanings :
ஆரோக்ய வாழ்வு :
சங்கு பூ கூந்தலுக்கு சிறந்தது, இதில் உள்ள அந்தோசயனின் என்னும் ஆன்டி ஆக்சிடண்ட் தலையில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து உச்சந்தலையை ஆரோக்கியமாக வைத்திருக்கிறது.
நீதிக்கதை
ஒரு கிராமத்தில் அனில், சுனில் என்ற இரண்டு நண்பர்கள் இருந்தனர். கிராமத்திலிருந்து நகரத்திற்கு அவர்கள் ரயில் வண்டி மூலம் பயணித்தனர். அவர்கள் இருவரும் தங்களுக்கு ஓர் கைக் கடிகாரத்தை வாங்க திட்டமிட்டனர்.
ஓர் இளைஞன் இவர்கள் இருவரும் பேசிக் கொண்டிருந்ததை பார்த்து வெளிநாட்டிலிருந்து கொண்டு வந்த கடிகாரங்கள் என்று காண்பித்து கடிகாரங்கள் தங்கத்தினால் ஆனது என்றும் கூறினார்.
அனிலுக்கு அந்தக் கடிகாரம் மிகவும் பிடித்து விட்டது, அதை உடனடியாக வாங்க ஒப்புக்கொண்டான். அந்த கடிகாரத்தை வாங்க வேண்டாம் என சுனில் அனிலிடம் பல தடவை கூறினார். சுனிலின் மறுப்புறைக்கு அனில் கவனம் செலுத்தாமல் அனில் அந்த கடிகாரத்தை அதிக விலை கொடுத்து வாங்கினான். சில நாட்களுக்குப் பின்னர் அந்த கடிகாரத்தின் முள் நின்று விட்டது, அனில் அந்த கடிகாரத்தை பழுது பார்ப்பவரிடம் எடுத்துச் சென்ற போது அந்த கடிகாரம் தங்கத்தினால் தயாரிக்கப்படவில்லை என்றும் அவர் ஏமாற்றப்பட்டார் என்றும் பழுது பார்ப்பவர் அது தங்கமல்ல என கூறினார்.அவனுடைய முட்டாள்தனமான செயலால் அவசர முடிவை எடுத்ததை நினைத்து அவருடைய நண்பனின் பேச்சை கேட்காதது நினைத்தும் மிகவும் வெட்கப்பட்டார் அனில்.
நீதி:
மின்னுவதெல்லாம் பொன்னல்ல.
இன்றைய செய்திகள்
No comments:
Post a Comment