Saturday, November 18, 2023

இரத்தக் குழாய்களில் அடைப்பு ஏற்படாமல் இருக்க தவிர்க்கப்பட வேண்டிய உணவுகள்.!

உணவு எந்த அளவிற்கு நமது ஆரோக்கியத்தில் பங்கு வகிக்கிறதோ அதே அளவு நமது உடலில் நோய்கள் ஏற்படுவதற்கும் காரணமாக அமைகிறது.

நல்ல ஊட்டச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்த உணவை எடுத்துக் கொள்ளும் போது உடல் ஆரோக்கியம் மேம்படும். அதேநேரம் கெட்ட கொழுப்புகள் அதிகம் உள்ள பொருட்களை எடுத்துக் கொள்ளும் போது உடலுக்கு பல்வேறு விதமான தீங்குகள் ஏற்படுகின்றன. இதுபோன்ற உணவுகளால் நமது ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படவும் வாய்ப்புகள் இருக்கிறது அந்த உணவுகள் பற்றி பார்ப்போம்.

சீஸ் அதிகம் நிறைந்த பீட்சா போன்ற மேற்கத்திய உணவுகளை அதிக அளவில் சாப்பிடும் போது உடலில் கொலஸ்ட்ரால் அதிகரிக்கிறது. மேலும் இது ரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படுவதற்கும் முக்கிய காரணமாக அமைகிறது. எண்ணெயில் டீப் ஃப்ரை செய்யப்பட்ட பிரெஞ்ச் ப்ரைஸ் சாப்பிடுவதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிப்பதோடு நமது உடலில் கொலஸ்ட்ராலும் அதிகரிக்கிறது.

கார்பனேட்டட் குளிர்பானங்களை குடிப்பதன் மூலம் ரத்தத்தில் சர்க்கரையின் அளவு அதிகரிக்க முக்கிய காரணமாக அமைகிறது. இவை உடலுக்கு நீரிழிவு நோய் ஏற்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. மேலும் எண்ணையில் பொரித்து எடுக்கப்பட்ட புரோஸ்டட் சிக்கன் வகைகள் நம் உடலில் கெட்ட கொலஸ்ட்ரால் அதிகரிப்பதற்கு காரணமாக இருக்கிறது. இவற்றால் இரத்த நாளங்களில் அடைப்புகள் ஏற்பட வாய்ப்பு அதிகம்.

ஐஸ்கிரீம்களில் கொலஸ்ட்ரால் மற்றும் கலோரிகள் அதிகம். மேலும் இவற்றின் இனிப்பு காரணமாக ரத்தத்தில் சர்க்கரை அளவு உயர்கிறது. இவற்றில் இருக்கக்கூடிய அதிகப்படியான கொழுப்புச்சத்து இரத்த நாளங்களில் அடைப்பை ஏற்படுத்த காரணமாக இருக்கிறது. மேலும் இறைச்சி உணவுகளை அதிகப்படியாக எடுத்துக் கொள்வதன் மூலமும் இரத்த நாளங்களில் அடைப்பு ஏற்படலாம். இது போன்ற உணவுகளை தவிர்த்து நல்ல ஆரோக்கியமான முறையில் உணவு எடுத்துக் கொள்வதன் மூலம் நோயற்ற வாழ்வை வாழலாம்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News