Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, November 12, 2023

TNPSC-யில் காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.! வெளியான சூப்பர் அறிவிப்பு.!


அரசு துறைகளில், கணக்கு அதிகாரி பதவியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழ்நாடு அரசு தேர்வாணையம் தேர்வு தேதியை அறிவித்துள்ளது.

தமிழக கருவூலம் மற்றும் கணக்கு துறையில், கணக்கு அதிகாரி நிலை – 3ல், 7 மருத்துவ சேவை கழகத்தின் கணக்கு அதிகாரி பதவியில், 1; தமிழக தொழில் முதலீட்டு கழகத்தில் மேலாளர் பதவியில், நான்கு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. தொழில் முதலீட்டு கழகத்தில் நிதி பிரிவு அதிகாரி, 27; தமிழக கூட்டுறவு பால் உற்பத்தியாளர் கூட்டமைப்பு நிறுவன் மேலாளர் பதவியில், 13 என மொத்தம் 52 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

இதற்கான போட்டி தேர்வு, பிப்ரவரி 5, 6ம் தேதிகளில் நடக்க உள்ளது. தேர்வுக்கு விண்ணப்ப பதிவு நேற்று துவங்கியது; அடுத்த மாதம், 8ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். தேர்வு குறித்த கூடுதல் விபரங்களை, www.tnpsc.gov.in என்ற இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment