Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, December 27, 2023

கல்லுாரிகளில் காலியிடங்கள்! டி.ஆர்.பி., தேர்வு வழியாக நிரப்ப வலியுறுத்தல்

அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர் பணியிடங்கள் நிரப்புவதில் பல்வேறு முறைகேடுகள் நடப்பதால், டி.ஆர்.பி., வாயிலாக நிரப்ப, பல்கலை ஆசிரியர் சங்கம் வலியுறுத்தியுள்ளது.தமிழகத்தில், 162 கல்லுாரிகள் அரசின் நிதி உதவி பெற்று செயல்பட்டு வருகின்றன.

அரசு கல்லுாரிகள் போன்று அல்லாமல், உதவி பெறும் கல்லுாரிகளில் ஆசிரியர் பணியிடங்கள் நிரப்ப மண்டல கல்லுாரி இணை இயக்குனர் பொறுப்பேற்கிறார். இச்சூழலில் காலியிடங்கள் நிரப்பும் செயல்பாடுகளில் முறைகேடுகள் தொடர்ந்து நடப்பதாக புகார் எழுந்துள்ளது.தமிழகத்தில் சென்னை, வேலுார், தஞ்சாவூர், திருச்சி, தர்மபுரி, கோவை, மதுரை, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் அலுவலகம் செயல்படுகிறது. தற்போது பொறுப்பு வகிக்கும் சிலர் மீது, முறைகேடு புகார்களும் நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இப்பதவி உயர்வில் பணி மூப்பு விதிமுறைகள் ஏதும் பின்பற்றப்படவில்லை என்ற புகாரும் எழுந்துள்ளன.இந்நிலையில், அரசு உதவி பெறும் கல்லுாரிகளிலுள்ள காலியிடங்களை நிரப்பும் பொறுப்பு, மண்டல கல்லுாரி கல்வி இயக்குனர்கள் பொறுப்பில் இருந்து மாற்றப்பட்டு டி.ஆர்.பி., வழியாக நடைமுறைப்படுத்த பல்வேறு தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது.அரசு உதவி பெறும் கல்லுாரி ஆசிரியர் நியமனங்களில் முறைகேடுகள் தொடர்ந்து நடந்து வருகின்றன.

50 லட்சம் முதல் ஒருகோடி ரூபாய் வரை பேரம் பேசப்படுகிறது. இதற்கு ஒத்து வராத ஒரு சில கல்லுாரிகளுக்கு காலியிடங்களை நிரப்ப அனுமதி மறுக்கப்படுகிறது. முறைகேடுகளை தவிர்க்க, அரசு உதவி பெறும் கல்லுாரிகளில் உள்ள அனைத்து காலிப்பணியிடங்களை அரசே டி.ஆர்.பி., மூலம் நிரப்ப முடிவெடுக்கவேண்டும் என பல்கலை ஆசிரியர் சங்கம் மாநில தலைவர், திருநாவுக்கரசு கூறினார்.

No comments:

Post a Comment