Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, January 11, 2024

வெறும் வயிற்றில்நெல்லிக்காய் ஜூஸ்... உடலில் ஏற்படும் அதிசய மாற்றங்கள்!

நெல்லிக்காயின் மருத்துவ பண்புகள் பற்றி நாம் எவ்வளவு அறிந்திருந்தாலும், அது மிக குறைவானதாகவே இருக்கும்.

நெல்லிக்காய் கிட்டதட்ட நூறு நோய்களுக்கு மருந்தாக கருதப்படுகிறது. இதனை உட்கொள்வதால், நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிப்பது மட்டுமின்றி, பல நோய்களை வேருடன் அகற்றும் திறன் கொண்டது. வைட்டமின் சி, வைட்டமின் ஏபி, பொட்டாசியம், கால்சியம், மெக்னீசியம், இரும்பு, கார்போஹைட்ரேட், நார்ச்சத்து, டையூரிடிக் அமிலம் போன்ற குணங்கள் நெல்லிக்காயில் ஏராளமாக உள்ளன. இது உங்கள் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்தவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உங்கள் இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருக்கவும் உதவுகிறது. அதோடு, சரும பிரச்சினைகளை தீர்க்க உதவுகிறது. சேதமடைந்த செல்களை சரி செய்கிறது. நல்ல சரும ஆரோக்கியத்தை வழங்குகிறது. உடலில் உள்ள நச்சுக்களை நீக்கவும் உதவும் ஒரு சிறந்த காலை பானமாக இருக்கும் நெல்லிக்காய் ஜூஸை காலையில் வெறும் வயிற்றில் குடிப்பதால் பல ஆரோக்கிய நன்மைகள் கிடைக்கும். நெல்லிக்காயை உட்கொள்வது எந்த அளவிற்கு நன்மை பயக்கும் மற்றும் எந்தெந்த நோய்களிலிருந்து உங்களுக்கு நிவாரணம் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளலாம்.

வெறும் வயிற்றில் நெல்லிக்காயை சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள்

நோய் எதிர்ப்பு சக்தி:

நெல்லிக்காய் சாறு பற்றிய மற்றொரு நல்ல விஷயம் என்னவென்றால், இது நோய் எதிர்ப்பு சக்தியை மேம்படுத்த உதவுகிறது. நெல்லிக்காய் சாறு வைட்டமின் சி ஊட்டசத்தின் நல்ல மூலமாகும். இது ஆரோக்கியமான நோயெதிர்ப்பு அமைப்புக்கு முக்கியமானது (Health Tips). வைட்டமின் சி உடலின் வெள்ளை இரத்த அணுக்களின் உற்பத்தியை அதிகரிக்க உதவுகிறது. இது தொற்றுநோய்களைத் தடுக்கப் பயன்படுகிறது.

மலச்சிக்கல் பிரச்சனை:

மலச்சிக்கல் பிரச்சனையால் பாதிக்கப்பட்டிருந்தால், நேல்லிகாய் ஜூஸை தவறாமல் எடுத்துக் கொள்வது வியக்கத்தக்க பலன்களைத் தரும். மலச்சிக்கல் மட்டுமல்ல நீங்கள் எந்த வகையான செரிமான ஆரோக்கிய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டு வந்தாலும், அம்லா ஜூஸ் குடித்து உங்கள் நாளைத் தொடங்குங்கள். நெல்லிக்காய் சாறு ஒரு இயற்கை மலமிளக்கி என்பதால், செரிமானத்தை மேம்படுத்தவும் மலச்சிக்கலை போக்க உதவும். செரிமானம் தொடர்பான பிரச்சனைகளுக்கு மாமருந்தாக இருக்கும்.

ஆரோக்கியமான கல்லீரல்:

உங்களுக்கு கல்லீரலில் ஏதேனும் பிரச்சனை இருந்தால் நெல்லிக்காய் ஜூஸ் செய்து தேன் சேர்த்து சாப்பிடுங்கள். இது உங்கள் கல்லீரலையும் ஆரோக்கியமாக வைத்திருக்கும். இத்துடன் மஞ்சள் காமாலை நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிவாரணம் கிடைக்கும்.

உடல் பருமன் குறையும்:

வெறும் வயிற்றில் நெல்லிக்காய் ஜூஸ் குடிப்பதால் உங்கள் உடல் பருமனை வேகமாக குறைக்கலாம். நெல்லிக்காய் சாறு, நார்ச்சத்துக்கான நல்ல மூலமாகும், இது சாப்பிட்ட பிறகு வயிறு நிறைந்த உணர்வு ஏற்படுகிறது. இந்த பானம் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரிக்கவும், எடை இழப்பை ஊக்குவிக்கவும் உதவும்.

நெல்லிக்காய் ஜூஸை தயாரிக்கும் முறை

முதலில் அம்லாவை நன்கு கழுவவும். அதன் பிறகு, அதை சிறிய துண்டுகளாக வெட்டி விதைகளை அகற்றவும். இப்போது மிக்ஸியில் அரைக்கவும். இதனுடன் சீரகம், உப்பு மற்றும் தண்ணீர் சேர்த்து மீண்டும் அரைக்கவும். இதற்குப் பிறகு, அதை வடிகட்டவும். உங்கள் நெல்லிக்காய் சாறு தயார். ஒரு நாளைக்கு ஒன்று முதல் இரண்டு தேக்கரண்டி ஆம்லா ஜூஸ் பரிந்துரைக்கப்படுகிறது. இருப்பினும், விரும்பிய பலன்களை அடைய, குறைந்தபட்ச அளவோடு தொடங்கி, பின்னர் படிப்படியாக அதை அதிகரிப்பது முக்கியம். நெல்லிக்காய் சாற்றை அதிக அளவு உட்கொள்வது சிலருக்கு வயிற்றுப்போக்கு உள்ளிட்ட எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும்.

No comments:

Post a Comment