Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, January 22, 2024

வெந்தய நீர்: பாடாய் படுத்தும் பல நோய்களின் வில்லன்

நமது இந்திய சமையலறைகளில் பல வித மசாலாக்களை பயன்படுத்துகிறோம். இவை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல்,  பல வித ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றன.

இவை உணவின் சுவையை அதிகரிப்பது மட்டுமல்லாமல், பல வித ஆரோக்கிய நன்மைகளையும் தருகின்றன. இவற்றால் நம்மை தினமும் பாடாய் படுத்தும் பல பிரச்சனைகளுக்கு தீர்வு காண முடியும். இந்த மசாலாப் பொருட்களில் முக்கியமான ஒன்று வெந்தயம். வெந்தயம் உணவின் சுவையை இரட்டிப்பாக்க உதவுகிறது.

வெந்தயத்தில் ஆரோக்கிய நன்மைகள் (Health Benefits of Fenugreek)

வெந்தயம் பொதுவாக மசாலா பொருளாகவும் மூலிகை மருந்தாகவும் பயன்படுத்தப்படும் ஒரு தாவரமாகும். இதன் விதைகள் சற்று கசப்பான சுவை கொண்டவை. இவை பெரும்பாலும் இந்திய சமையலில் பல உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன. வெந்தயத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்பு, மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்துள்ளன. வெந்தய நீரால் கிடைக்கும் நன்மைகளில் சீரான செரிமானம், இரத்த சர்க்கரை அளவின் கட்டுப்பாடு, வீக்கத்தைக் குறைக்க உதவும் திறன் போன்ற நன்மைகளும் அடங்கும். வெந்தய நீரை குடிப்பதால் நம் உடலில் ஏற்படக்கூடிய நன்மைகள் பற்றி இந்த பதிவில் காணலாம். மேலும் வெந்தய நீரை உட்கொள்ளும் முறை பற்றியும் இந்த பதிவில் காணலாம்.

வெந்தயம் சாம்பார், பொரியல், கலந்த சாதங்கள், ஊறுகாய் என பல வித உணவுகளின் சுவையை அதிகரிக்கின்றது. சுவையை அதிகரிப்பதுடன் இதில் பல ஆரோக்கிய நன்மைகளும் உள்ளன. வெந்தயம் (Fenugreek), வெந்தய கீரை போலவே வெந்தய நீரிலும் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளன. வெந்தயம் பொதுவாக மசாலா பொருளாகவும் மூலிகை மருந்தாகவும் பயன்படுத்தப்படும் ஒரு தாவரமாகும். இதன் விதைகள் சற்று கசப்பான சுவை கொண்டவை. இவை பெரும்பாலும் இந்திய சமையலில் பல உணவு வகைகளில் பயன்படுத்தப்படுகின்றன.

வெந்தயத்தில் நார்ச்சத்து, வைட்டமின்கள் மற்றும் இரும்பு, மெக்னீசியம் மற்றும் மாங்கனீஸ் உள்ளிட்ட தாதுக்கள் நிறைந்துள்ளன. வெந்தய நீரால் கிடைக்கும் நன்மைகளில் சீரான செரிமானம், இரத்த சர்க்கரை அளவின் கட்டுப்பாடு, வீக்கத்தைக் குறைக்க உதவும் திறன் போன்ற நன்மைகளும் அடங்கும். வெந்தய நீரை தினமும் குடித்து வந்தால் உடலில் ஏற்படும் பல நோய்கள் குணமாகும்.

வெந்தய நீரில் உள்ள ஊட்டச்சத்துகள்

நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து, சர்க்கரை, பாஸ்பரஸ் அமிலம், சோடியம், துத்தநாகம், பாஸ்பரஸ், ஃபோலிக் அமிலம், இரும்புச்சத்து, கால்சியம், மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற உடலுக்குத் தேவையான பல ஊட்டச்சத்துக்கள் இதில் உள்ளன. வெந்தய நீரை (Fenugreek Water) குடிப்பதால் ஏற்படும் அற்புத நன்மைகளை பற்றி இங்கே தெரிந்து கொள்வோம்.

எடை இழப்பு

பலருக்கு தொப்பை (Belly Fat) பெரிதாகி உடல் எடை அதிகரிப்பது (Weight Loss) ஒரு மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளது. இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு வெந்தய நீர் உதவும். வெந்தய நீரில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது, இது பசியைக் குறைத்து வயிற்றை நிறைவாக வைத்திருக்கும். இந்த காரணத்தினால், வெந்தய நீர் உடல் எடையை குறைக்க உதவுகிறது.

சர்க்கரை நோய்

வெந்தயத்தில் போதுமான அளவு நார்ச்சத்து, புரதம், மாவுச்சத்து, சர்க்கரை மற்றும் பாஸ்பாரிக் அமிலம் உள்ளது. இது உடலில் குளுக்கோஸ் அளவை பராமரிக்க உதவுகிறது. நீரிழிவு நோயாளிகள் (Diabetes)வெந்தய நீரை தினமும் உட்கொள்ள வேண்டும்.

இதய பாதுகாப்பு

வெந்தய நீரில் உள்ள கலவைகள் மற்றும் ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவைக் குறைக்க உதவுகின்றன. இதை உட்கொள்வது நல்ல கொழுப்பின் அளவை அதிகரிக்கிறது. இதயம் (Heart Health) தொடர்பான நோய்களில் இருந்து நிவாரணம் பெற, தினமும் காலையில் வெந்தய நீரை பருக வேண்டும்.

ஹார்மோன் சமநிலை

வெந்தய நீர் அதன் பைட்டோ ஈஸ்ட்ரோஜன் உள்ளடக்கத்திற்கு அறியப்படுகிறது. இது ஹார்மோன் ஏற்றத்தாழ்வைக் (Hormonal Balance) கட்டுப்படுத்த உதவும், குறிப்பாக மெனோபாஸ் அறிகுறிகளை அனுபவிக்கும் பெண்களுக்கு இது மிகவும் உதவியாக இருக்கும்.

செரிமானம்

வெந்தய நீரில் ஏராளமான நார்ச்சத்து உள்ளது, இது வயிற்றுக்கு நல்லது. மலச்சிக்கல், அஜீரணம் (Digestion), வயிற்று வலி போன்ற வயிற்று நோய்களில் இருந்து விடுபட வெந்தய நீர் மிகவும் உதவுகிறது.

No comments:

Post a Comment