என்.எல்.சி. வேலை வாய்ப்பு; ஐ.டி.ஐ, டிப்ளமோ, டிகிரி தகுதி; உடனே விண்ணப்பிங்க!

தமிழகத்தில் செயல்பட்டு வரும் இந்திய பொதுத்துறை நிறுவனமான என்.எல்.சி எனப்படும் நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் ஐ.டி.ஐ, டிப்ளமோ மற்றும் டிகிரி படித்தவர்களுக்கான காலிப்பணியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

மொத்தம் 34 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் ஒடிசாவில் உள்ள சுரங்க அலுவலகங்களில் நிரப்பப்படும். இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 24.04.2024

Industrial Worker

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

Draughtsman - 1

Electrician - 3

Fitter - 2

Mechanic -Motor Vehicle - 2

Wireman - 1

கல்வித் தகுதி: 12 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மற்றும் சம்பந்தப்பட்ட பிரிவுகளில் ஐ.டி.ஐ படித்திருக்க வேண்டும்.

சம்பளம்; ரூ. 30,000

Clerical Assistant

காலி இடங்களின் எண்ணிக்கை: 17

கல்வித் தகுதி: இளங்கலை பட்டப்படிப்பு படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 30,000

Junior Engineer

காலி இடங்களின் எண்ணிக்கை: 8

Civil - 5

Mechanical - 2

Electrical - 1

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் டிப்ளமோ படித்து தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பளம்: ரூ. 38,000

வயது தகுதி: 01.03.2024 அன்று 30 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி வயது வரம்பில் தளர்வு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு எழுத்துத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://www.nlcindia.in/new_website/careers/CAREER.htm என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 24.04.2024

விண்ணப்பக் கட்டணம்: ஜூனியர் இன்ஜினியர் பணியிடங்களுக்கு ரூ. 595. எஸ்.சி/ எஸ்.டி/ மாற்றுத்திறனாளி/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ. 295.
இதர பணியிடங்களுக்கு ரூ. 486. எஸ்.சி/ எஸ்.டி/ மாற்றுத்திறனாளி/ முன்னாள் ராணுவத்தினருக்கு ரூ. 236.

மேலும் விவரங்களுக்கு https://www.nlcindia.in/new_website/careers/Detailed%20Advt%2002%202024.pdf என்ற இணையதள பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை பார்வையிடவும்.
Share:

No comments:

Post a Comment

Total Pageviews

Categories