Subscribe Us

Monday, May 6, 2024

மே 10ம் தேதி உள்ளூர் விடுமுறை கலெக்டர் அறிவிப்பு!

தமிழகத்தில் அரசு மற்றும் பொதுவிடுமுறைகளை தவிர்த்து உள்ளூர் பண்டிகைகள், திருவிழாக்களுக்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுவதுண்டு. இந்த விடுமுறைக்கான உத்தரவை மாவட்ட கலெக்டர் பிறப்பிப்பது வழக்கமாக இருந்து வருகிறது.

இந்நிலையில், தேனி மாவட்டம் வரலாற்று சிறப்பு மிக்க வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் சித்திரைத் திருவிழா கொண்டாடப்பட உள்ளதையடுத்து மே 10ம் தேதி உள்ளூர் மக்களும் திருவிழாவில் கலந்து கொள்ள வசதியாக, உள்ளூர் விடுமுறை அறிவித்து ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

வீரபாண்டி கௌமாரியம்மன் கோவிலில் ஒவ்வொரு ஆண்டும் சித்திரைத் திருவிழா வெகு விமரிசையாக கொண்டாடப்படும். இந்நிலையில் நடப்பாண்டுக்கான திருவிழா மே 10ம் தேதி நடைபெற உள்ளது. 

அன்றைய தினம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் பள்ளி கல்லூரிகளுக்கும் உள்ளூர் விடுமுறைக்கான அறிவிப்பை மாவட்ட ஆட்சியர் வெளியிட்டுள்ளார். இந்த நாளில் அரசு கருவூலக அலுவலகங்களில் குறைந்த எண்ணிக்கையிலான பணியாளர்களுடன் அலுவலகங்கள் இயங்கும். இதனை ஈடு செய்யும் வகையில் மற்றொரு பணி நாள் பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கலெக்டர் அறிவித்துள்ளார்.

No comments:

Post a Comment

Popular Feed