Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, May 16, 2024

பலாப்பழத்தை உட்கொண்டால் கோடை காலத்தில் வரும் பல பிரச்சனைகளை சமாளிக்க முடியும்..!



கோடை காலத்தில் அதிகமாக பலாப்பழத்தை உட்கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு நன்மை பயக்கும். பலாப்பழத்தை உட்கொண்டால், கோடை காலத்தில் வரும் பல பிரச்சனைகளை சமாளிக்க முடியும். ஏனெனில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-சி, இரும்பு, நார்ச்சத்து, பொட்டாசியம் போன்ற பல வகையான ஊட்டச்சத்துக்கள் பலாப்பழத்தில் உள்ளன. இது நோய்களை எதிர்த்துப் போராடுகிறது. மேலும் இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

எலும்புகளை வலுவாக வைத்திருக்க கால்சியம் மிகவும் முக்கியமானது. பலாப்பழத்தில் கால்சியம், வைட்டமின் சி மற்றும் மெக்னீசியம் ஆகியவை உள்ளன. இது எலும்புகளை வலிமையாக்குகிறது, உடலை ஆரோக்கியமாக வைக்கிறது. எலும்புகள் வலுவாக இருக்க, பலாப்பழத்தை உட்கொள்வது நல்லது.

சிறுநீரக குழாய் புற்றுநோய் பாக்டீரியாவினால் ஏற்படும் சிறுநீரக குழாய் தொற்றுநோய்க்கு தினமும் 2 வேளை பலாப்பழ ஜூஸ் தொடர்ந்து ஐந்து நாட்கள் உட்கொண்டால் நோய் தீரும்.

வைட்டமின் ஏ உயிர்சத்து அதிகம் காணப்படுகிறது. இது உடலுக்கும், மூளைக்கும் வலுவை அளிக்கும். மேல் தோலை மிருதுவாகவும், வழவழப்பாகவும் செய்யும்.

உயர் இரத்த சர்க்கரையால் ஏற்படும் நீரிழிவு நோயில் பலாப்பழம் நுகர்வு மிகவும் பயனுள்ளதாக கருதப்படுகிறது. உண்மையில், இதில் உள்ள நார்ச்சத்து உடலில் குளுக்கோஸ் மற்றும் இன்சுலின் வெளியீட்டு வேகத்தை குறைக்கிறது மற்றும் பசியைக் கட்டுப்படுத்த உதவுகிறது. இதன் மூலம், சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும். நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட ஒருவருக்கு அதிக சிரமம் இருக்காது.

பலாப்பழத்தில் கலோரிகள் குறைவாக உள்ளன. இது எடை இழப்புக்கு பயனுள்ளதாக இருக்கும். அதுமட்டுமின்றி இதில் உள்ள நார்ச்சத்தும் மிக அதிகம். பலாப்பழத்தை உட்கொள்வதன் மூலம் நீண்ட நேரம் பசி எடுக்காமல் இருப்பதுடன் உடல் எடையும் குறையும். பலாப்பழம் சாப்பிடுவது வளர்சிதை மாற்ற விகிதத்தையும் அதிகரிக்கிறது. இது எடை இழப்பு மேலாண்மைக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

தூக்கமின்மை போன்ற தூக்கக் கோளாறுகளிலும் பலாப்பழம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். பலாப்பழத்தில் மெக்னீசியம் உள்ளது. இது உடலில் உள்ள நரம்பியக்கடத்திகளின் அளவைக் கட்டுப்படுத்தும். இது உங்கள் நரம்புகளை தளர்த்தி நன்றாக தூங்க அனுமதிக்கிறது. பலாப்பழத்தை அதிகமாக உட்கொள்வதன் மூலம் ஒருவருடைய சீரற்ற தூங்கும் பழக்கத்தை சரிசெய்ய முடியும்.

பலாப்பழத்தை அளவுக்கு அதிகமாக உடகொண்டால் வயிறு மந்தமாகி வயிற்று வலியையும், வாந்தியையும் உண்டாக்கிவிடும்.

பலாபழ விதைகள் சாப்பிடுவதற்கு சுவையாக இருந்தாலும் மலச்சிக்கல், கள்ளு குடிப்பவர்களுக்கு உண்டாவது போன்ற புளியேப்பம், கல் போல் வயிறு கட்டிப்போவது, வயிற்றுவலி போன்றவற்றை உண்டாக்கும்.

பலா பிஞ்சினை அதிக அளவில் உண்பதால் செரியாமை வயிற்றுவலி போன்றவை ஏற்படும். பலாப்பழத்தை தேன் அல்லது நெய்யில் தொட்டு சாப்பிடலாம். இவ்வாறு சாப்பிட்டாலே அதன் நற்பலன்களை பெற முடியும்.

பலா பிஞ்சினை அதிகமாய் உணபதால் செரியாமை, வயிற்று வலி போன்றவை ஏற்படுவதுடன் சொறி, சிரங்கு, கரப்பான், இருமல், இரைப்பு, வாத நோய்கள் ஏற்படும்.

குடல் வால் சுழற்சி எனப்படும் "அப்பண்டிசைடிஸ்" உள்ளவர்கள் பலாப்பழத்தை சாப்பிடக் கூடாது.

No comments:

Post a Comment