Wednesday, May 15, 2024

TRB - உதவிப் பேராசிரியர்கள் நியமன விண்ணப்பதாரர்கள் கவனத்திற்கு


ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள் மற்றும் அரசு கல்வியியல் கல்லூரிகளில் உள்ள 4000 உதவிப் பேராசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு போட்டித் தேர்வு மூலம் நேரடி நியமனம் செய்வதற்கு அறிவிக்கை எண் . 02 / 2024 , நாள் . 14.03.2024 அன்று வெளியிடப்பட்டு விண்ணப்பதாரர்கள் இணையவழி விண்ணப்பங்களை பதிவேற்றம் செய்ய 15.05.2024 மாலை 5.00 மணி வரை கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் , விண்ணப்பதாரர்கள் தங்களது இணையவழி விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ளவும் அவகாசம் வழங்க கோரியதின் அடிப்படையில் உதவிப் பேராசிரியர் பணியிடத்திற்கு விண்ணப்பித்து கட்டணம் செலுத்தியவர்கள் தங்களின் விண்ணப்பத்தில் திருத்தம் ( Edit Option ) மேற்கொள்ள விரும்பினால் 16.05.2024 முதல் 19.05.2024 மாலை 5.00 மணி வரை திருத்தம் செய்ய ஆசிரியர் தேர்வு வாரிய இணையதளத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகிறது.

மேலும் , விண்ணப்பதாரர்கள் திருத்தங்கள் ( Edit Option ) மேற்கொள்ளும்போது கீழ்காணும் வழிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை கவனமாக பின்பற்றும்படி அறிவுறுத்தப்படுகிறது.

TRB Press News - Download here

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News