Search This Blog

Thursday, June 27, 2024

மத்திய அரசுத் துறைகளில் 17727 காலிப்பணியிடங்கள் தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்

0 comments
மத்திய அரசுத் துறைகளில் காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிட்டப்பட்டுள்ளது.

தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அரசுப் பணியாளர் தேர்வு ஆணையம் (SSC) வெளியிட்டுள்ளது. இதன் மூலம் குரூப் B, C பிரிவுகளில் காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன.

பணியிடங்கள் :17727

கல்வித் தகுதி: இளங்கலை பட்டம், ஜூனியர், சீனியர் Statistical அதிகாரி பணிக்கு இளங்கலை பட்டத்துடன் கணிதத்தில் 60% மதிப்பெண் எடுத்திருக்க வேண்டும்.

வயது வரம்பு : 18 முதல் 27 வயது வரை குறிப்பிட்ட சில பணியிடங்களுக்கு 30 வயது வரை விண்ணப்பிக்கலாம்.


விண்ணப்பிக்க கடைசி தேதி : ஜூலை 24, 2024 - இரவு 11 மணி.

விண்ணப்பத்தில் திருத்தம் செய்ய, ஆகஸ்ட் 10 முதல் 11 வரை

மாதச் சம்பளம் :
Pay Level-7 : ரூ. 44,900 - 1,42,400
Pay Level-6 : ரூ. 35,400 - 1,12,400
Pay Level-5: ரூ. 29,200 - 92,300
Pay Level-4 : ரூ. 25,500 - 81, 100
கூடுதல் தகவல்களுக்கு https://ssc.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ இணையதள முகவரியில் விண்ணப்பித்து பயனடையலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment