Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளியிலேயே ஆதார் சேவை வழங்குவதற்கான முகாம் நேற்று தொடங்கியது. இதன்மூலம் வரும் கல்வி ஆண்டில் 60 லட்சம் மாணவர்கள் பயன்பெறுவார்கள் என்று பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக பள்ளிக்கல்வி துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது:
மத்திய, மாநில அரசுகள் வழங்கும் அனைத்து விதமான கல்வி உதவி தொகை, ஊக்கத் தொகை, நலத்திட்டங்களை பெறுவது, வங்கி கணக்குகள் தொடங்குவது, மேற்படிப்புக்கு விண்ணப்பம் செய்வது போன்ற சேவைகளுக்கு ஆதார் எண் அவசியமாகிறது.
பள்ளி குழந்தைகள் இந்த சேவைகளை எவ்வித தடையும் இன்றி எளிதில் பெறுவதற்காக ‘பயிலும் பள்ளியிலேயே ஆதார்’ என்ற திட்டத்தை கோவை அரசு மேல்நிலைப் பள்ளியில் பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஸ் கடந்த பிப்ரவரி 25-ம் தேதி தொடங்கிவைத்தார்.
இத்திட்டம்மூலம் அரசு, அரசு உதவிபெறும் மற்றும் தனியார் பள்ளிகளில் ஆதார் எண் இல்லாத மாணவ, மாணவிகள் புதிய ஆதார் எண் பெறுதல், ஏற்கெனவே ஆதார் எண் உள்ளவர்களுக்கு பயோமெட்ரிக் புதுப்பித்தல் உள்ளிட்ட சேவைகளை பள்ளியிலேயே மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதன்மூலம் 48 ஆயிரம் பள்ளி குழந்தைகளுக்கு பள்ளியிலேயே ஆதார் சேவை வழங்கப்பட்டது.
இதன் தொடர்ச்சியாக, வரும் புதிய கல்வி ஆண்டில் 60 லட்சம் பள்ளி குழந்தைகளுக்கு ஆதார் பயோமெட்ரிக் புதுப்பித்தல் மற்றும் புதிய ஆதார் பதிவு சேவைக்காக அவர்களது பள்ளியிலேயே முகாம்அமைக்கப்பட்டு, இச்சேவை தொடர்ந்து வழங்கப்படும். இந்தமுகாம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment