Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, August 29, 2024

தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான தமிழக ஆசிரியர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து


சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆண்டுதோறும் ஆசிரியர் தினமாகக் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த நாளில் சிறந்த ஆசிரியர்களுக்கு மத்திய அரசு சார்பில் தேசிய நல்லாசிரியர் விருதுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி இந்த ஆண்டு தேசிய நல்லாசிரியர் விருது பெறுகிறவர்களின் பட்டியலை மத்திய கல்வி அமைச்சகம் நேற்று வெளியிட்டது.

அந்த பட்டியலில் நாடு முழுவதும் பல்வேறு மாநிலங்களில் இருந்து 50 பேர் இடம்பெற்றுள்ளனர். இதில் தமிழ்நாட்டில் இருந்து வேலூர் மாவட்டம் ராஜாக்குப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆர். கோபிநாத் மற்றும் மதுரை டி.வி.எஸ். மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் முரளிதரன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

இந்த நிலையில் தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வாகியுள்ள தமிழக ஆசிரியர்களுக்கு கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில், "2024-ம் ஆண்டுக்கான தேசிய நல்லாசிரியர் விருதுக்கு தேர்வான வேலூர் மாவட்டம் ராஜாகுப்பம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி ஆசிரியர் ஆர். கோபிநாத் மற்றும் மதுரை மாவட்டம், லட்சுமிபுரம் டிவிஎஸ் மேல்நிலைப்பள்ளியைச் சேர்ந்த முதுகலை தொழிற்கல்வி ஆசிரியர் ஆர்.எஸ். முரளிதரனுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

இந்த மதிப்புமிக்க விருது, கல்வி மற்றும் புதுமையான கற்பித்தல் முறைகளுக்கான உங்களின் சிறப்பான அர்ப்பணிப்பை அங்கீகரித்து, கற்பித்தல் மற்றும் மாணவர் மேம்பாட்டில் சிறந்து விளங்குவதற்கான உயர் தரத்தையும் குறிப்பதாக உள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment