Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 6, 2024

தமிழகம் முழுவதும் நாளை 6 முதல் 9-ம் வகுப்பு மாணவர்களுக்கு. வெளியான மிக முக்கிய அறிவிப்பு.!!!



தமிழகத்தில் 6 முதல் 9ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கான கற்றல் திறன்வழி மதிப்பீட்டுத் தேர்வு நாளை முதல் தொடங்க உள்ளது.

இந்த தேர்வுகள் அக்டோபர் முதல் ஜனவரி மாதம் வரை நடத்தப்பட உள்ளது. முதல்கட்டத் தேர்வு அக்டோபர் 7 முதல் 10ம் தேதி வரை நடைபெறும், 2ம் கட்டத் தேர்வு அக்டோபர் 22 முதல் 25ம் தேதி, 3ம் கட்டத் தேர்வு நவம்பர் 26 முதல் 29ம் தேதி, 4ம் கட்டத் தேர்வு ஜனவரி 28 முதல் 31ம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கான வினாத்தாள்களை மாணவர்கள் தேர்வு தொடங்கும் நாளுக்கு முன்பாகவே https://exam.tnschools.gov.in/#/ என்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். இது மாணவர்களுக்கு முன்கூட்டியே தயாராகி தேர்வில் சிறப்பாக பங்கேற்க உதவும்.

No comments:

Post a Comment