JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Friday, October 11, 2024

தமிழகத்தில் அரையாண்டு தேர்வு எப்போது? பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு.

தமிழகத்தில் தற்போது காலாண்டு விடுமுறை முடிவடைந்த நிலையில் பள்ளிகள் கடந்த திங்கட்கிழமை திறந்தது. இதைத்தொடர்ந்து தற்போது ஆயுத பூஜை, விஜயதசமி ஆகிய பண்டிகைகளை முன்னிட்டு தொடர் விடுமுறை வந்துள்ளது.

இந்நிலையில் 2024- 25 ஆம் ஆண்டு திருத்திய நாள்காட்டியில் அரையாண்டு தேர்வு நடைபெறும் தேதி மற்றும் விடுமுறை குறித்த தகவல்கள் வந்துள்ளது.

அதன்படி டிசம்பர் 16ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை அரையாண்டு தேர்வுகள் நடைபெற உள்ளது. 

இதைத்தொடர்ந்து டிசம்பர் 24 முதல் ஜனவரி 1-ம் தேதி வரை 9 நாட்கள் அரையாண்டு விடுமுறை வழங்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது. 

மேலும் ஜனவரி மாதம் 6-ம் தேதி 10 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடைபெறும் என்றும் பள்ளிக்கல்வித்துறை தெரிவித்துள்ளது.

No comments:

Post a Comment