Thamizhkadal WhatsApp Channel

ஆசிரியர்கள் நியமனம்- கூடுதல் வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்க அறிவுறுத்தல்


நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 9-ஆம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவர்களுக்கு கூடுதலாக உயர் கல்வி வழிகாட்டி ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்று பள் ளிக் கல்வித் துறை தெரிவித்துள் ளது.

இது குறித்து அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலு வலர்களுக்கும் பள்ளிக் கல்வித் துறை இயக்குநரகம் அனுப்பி யுள்ள சுற்றறிக்கை:

தமிழகத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ் அரசுப் பள்ளிகளில் 9 முதல் 12-ஆம்வகுப்புவரை பயிலும் மாணவர்களுக்கு உயர் கல்வி வழிகாட்டி பயிற்சி முகாம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒவ்வொரு பள்ளிக்கும் தலா ஒரு உயர்கல்வி வழிகாட்டி ஆசி ரியர் நியமிக்கப்பட்டு மாணவர் களுக்கு உயர்கல்வி தொடர்பான விவரங்கள் பயிற்சியாக வழங்கப் படுகிறது.

அந்த வகையில், அனைத்து மாணவர்களுக்கும் உயர் கல்வி சார்ந்த விழிப்புணர்வு தகவல்கள், மனநலன் மற்றும் வாழ்வியல் திறன் செயல்பாடுகள் முழுமை யாகச் சென்றடைய வேண்டும்.

இதற்காக உயர் கல்வி வழி காட்டி திட்டத்துக்கு தற்போது கூடுதல் வழிகாட்டு நெறிமுறை கள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, பள்ளிகளில் ஏற்கெ னவே உள்ள உயர் கல்வி வழி காட்டி ஆசிரியருடன், கூடுதலாக 9 முதல் 12-ஆம் வகுப்புகள் வரை உள்ள வகுப்பு ஆசிரியர்களையும் உயர்கல்வி வழிகாட்டி ஆசிரியர்க ளாக நியமிக்க வேண்டும்.

மாணவர்கள் உயர்கல்வி தொடர்வதை ஊக்குவிக்கும் வித மாக என்னென்ன உயர் கல்வி படிப்புகள் படிக்கலாம், அதற்கு என்ன பாடங்களை தேர்வு செய்ய வேண்டும் என்பதை அதற்கென ஒதுக்கப்பட்ட பாடவேளையில் எடுத்துரைக்க வேண்டும்.

மேலும், தினமும் காலை வணக்கக் கூட்டத்தில் மனநலன் மற்றும் வாழ்வியல் திறன்சார்ந்த கருத்துகளை மாணவர்கள் சிந்திக் கும் வகையில் தலைமை ஆசிரியர் கள் பகிர வேண்டும்.

உயர் கல்வி வழிகாட்டி மதிப் பீடு, மனநலம் மற்றும் வாழ்வி யல் திறன் மதிப்பீடு ஆகியவை 3 மாதங்களுக்கு ஒரு முறை வகுப் புத் தேர்வாக நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories