Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, January 3, 2025

கூடுதலாக முதுகலை ஆசிரியர் பணியிடங்கனை அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

மாணவர்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் 24 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் கூடுதலாக அனுமதித்து பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு

தமிழ்நாட்டிலுள்ள அரசு / நகராட்சி மேல்நிலைப்பள்ளிகளில் 01.08.2023 நிலவரப்படி மேற்கொள்ளப்பட்ட பணியாளர் நிர்ணயத்தில் , ஆசிரியர் இன்றி உபரி எனக் கண்டறியப்பட்ட ( Surplus Post Without Person ) 24 முதுகலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் சார்ந்த முதன்மைக் கல்வி அலுவலர்களால் சரண் செய்யப்பட்டு பள்ளிக் கல்வி இயக்குநரின் பொதுத் தொகுப்பிற்கு ஈர்த்துக் கொள்ளப்பட்டு பார்வை 2 ல் காண் செயல்முறைகள் வாயிலாக ஆணை வழங்கப்பட்டது.

அவ்வாறு பள்ளிக் கல்வி இயக்குநரின் பொதுத் தொகுப்பில் உள்ள முதுகலை ஆசிரியர் ( Surplus without person ) பணியிடங்களை 11 மற்றும் 12 ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கைக்கேற்ப கூடுதல் ஆசிரியர் பணியிடங்கள் கோரி சம்பந்தப்பட்ட மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களிடமிருந்து பெறப்பட்ட கருத்துருவின் அடிப்படையில் இணைப்பில் குறிப்பிட்டுள்ளவாறு 24 முதுகலை ஆசிரியர் பணியிடங்கள் தேவையுள்ள பள்ளிகளுக்கு ( ஆங்கிலம் -2 , கணிதம் - 06 , வேதியியல் -04 , தாவரவியல் -03 , வணிகவியல் -09 ) அப்பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் கல்வி நலனை கருத்தில் கொண்டு கூடுதலாக அனுமதித்து ஆணை வழங்கப்படுகிறது.

புதியதாக அனுமதிக்கப்பட்ட கூடுதல் பணியிடங்களை சார்ந்த பள்ளியின் அளவுகோல் பதிவேட்டில் ( Scale Register ) பதிவுகள் மேற்கொண்டு பராமரிக்குமாறு சம்பந்தப்பட்ட பள்ளித் தலைமையாசிரியருக்கு அறிவுறுத்தப்படுகிறது .

இணைப்பு - அனுமதிக்கப்பட்ட 24 கூடுதல் பணியிட விவரம்

DSE - Surplus Post to Need Schools PG - Proceedings👇👇👇👇

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News