Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, February 3, 2025

ரூ.12 லட்சம் வரை வருமான வரி இல்லாததால் எவ்வளவு சேமிக்க முடியும்?


மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட வருமான வரி சலுகை மூலம் ஆண்டுக்கு ரூ. 12 லட்சம் வரை வருமான வரி இல்லை. இதுதவிர, நிலையான வருமான வரி விலக்கு ரூ.75 ஆயிரம் உள்ளது. எனவே, சம்பளம் பெறுவோர் ஆண்டுக்கு ரூ.12 லட்சத்து 75 ஆயிரம் வரை வருமான வரி செலுத்தத் தேவையில்லை.

வரி செலுத்துவோர் ஆண்டுக்கு ரூ.12 லட்சம் வரை வருமானம் இருந்தால் அவர்கள் ரூ.80,000 அளவுக்கு பலன் பெறுவர். இது தற்போதுள்ள விகிதங்களின்படி செலுத்த வேண்டிய வரியில் 100 சதவீதம் ஆகும்.

ஆண்டுக்கு ரூ.18 லட்சம் வரை வருமானம் பெறுவோர் ரூ.70,000 வரை வரியை சேமிக்க முடியும். இது தற்போதைய வரி விகிதத்தில் 30 சதவீதம் ஆகும். ரூ. 25 லட்சம் வரை வருமானம் உள்ள ஒருவர் ரூ.1,10,000 அளவுக்கு வரி பலன் கிடைக்கும். இது தற்போதைய வரியில் 25 சதவீதம் ஆகும்.

No comments:

Post a Comment