Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 22, 2025

டான்செட்' தேர்வுக்கான விண்ணப்ப பதிவு- 26-ந்தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups

தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் கல்லூரிகள், தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீடு இடங்களில், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., ஆகிய முதுநிலை பட்டப்படிப்புகளுக்கு அண்ணா பல்கலைக்கழகத்தின் தமிழ்நாடு பொது நுழைவுத் தேர்விலும் (டான்செட்), எம்.இ., எம்.டெக்., எம்.பிளான்., எம்.ஆர்க் ஆகிய முதுநிலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பில் சேர பொது என்ஜினீயரிங் நுழைவுத் தேர்விலும் (சீட்டா) தேர்ச்சி பெறுவது கட்டாயம். இந்த தேர்வை, அண்ணா பல்கலைக்கழகம் நடத்தி வருகிறது.

அந்த வகையில், 2025-26-ம் கல்வியாண்டுக்கான 'டான்செட்' நுழைவுத் தேர்வு வருகிற மார்ச் மாதம் 22-ந்தேதி நடைபெறுகிறது. அதேபோல், சீட்டா நுழைவுத் தேர்வு மார்ச் மாதம் 23-ந்தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுகளுக்கான ஆன்லைன் விண்ணப்ப பதிவு கடந்த மாதம் 24-ந்தேதி தொடங்கி நேற்றுடன் முடிவடைந்தது. இந்த நிலையில், மாணவர்களின் கோரிக்கையை ஏற்று, டான்செட் மற்றும் சீட்டா நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் வருகிற 26-ந்தேதி வரை நீட்டித்து அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இளநிலை மாணவர்கள், https://tancet.annauniv.edu என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம். 'தேர்வுக்கான ஹால்டிக்கெட் வருகிற மார்ச் மாதம் 8-ந்தேதி வெளியாகிறது. தேர்வு முடிவுகள் ஏப்ரல் மாதம் வெளியாகும் என அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News