Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, February 15, 2025

TRB - இன்று (15.02.2025) வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு


ஆசிரியர் தேர்வு வாரியம்

பத்திரிகைச் செய்தி

மாநிலத் தகுதித் தேர்வு (SET) 2024 ஆம் ஆண்டிற்கான அறிவிக்கை (எண். 01/2024) 20.03.2024 அன்று மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் மூலம் வெளியிடப்பட்டு, இணையவழி வாயிலாக விண்ணப்பங்கள் பெறப்பட்டன. தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.

அரசாணை (D) எண். 278, உயர்கல்வித் (எச் 1) துறை, நாள்.17.12.2024 ன்படி மாநிலத் தகுதித் தேர்வினை ஆசிரியர் தேர்வு வாரியம் மூலமாக நடத்தப்பட வேண்டும் என்று அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில், UGC வழிகாட்டு நெறிமுறைகளின் அடிப்படையில், மாநிலத் தகுதித் தேர்வு, வருகின்ற 2025 மார்ச் மாதம் 6,7,8 மற்றும் 9 ஆகிய தேதிகளில் CBT மூலம் நடைபெறும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தேர்விற்கான நுழைவுச்சீட்டு (Hall Ticket) ஆசிரியர் தேர்வு வாரிய இணைய தளத்தில் (https://www.trb.tn.gov.in) தேர்வு தேதிக்கு 7 நாட்களுக்கு முன்பாக பதிவேற்றம் செய்யப்படும். அதனை பதவிறக்கம் செய்து எடுத்துக் கொள்ளலாம்.

குறிப்பு : மேற்படி நுழைவுச் சீட்டு விண்ணப்பதாரர்களுக்கு தனியாக அனுப்பப்படமாட்டாது.

No comments:

Post a Comment