Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Monday, March 10, 2025

மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினால் கடும் நடவடிக்கை - அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை


மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கினால் நடவடிக்கை எடுக்கப்படும்

* தமிழ்நாட்டில் மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக பாஜகவினர் கையெழுத்து இயக்கம் நடத்தியபோது மாணவர்களை கட்டாயப்படுத்தி கையெழுத்து வாங்கியதாக எழுந்த நிலையில்,

* பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் எச்சரிக்கை

பதிலளித்துள்ள அமைச்சர் அன்பில் மகேஸ், ”பள்ளிக்கூடங்களின் வாசல்களில் போர்டு வைத்துக்கொண்டு, பள்ளிக்குள் நுழைய செல்லும் பிள்ளைகளின் கையைப் பிடித்து இழுத்து, மும்மொழிக் கொள்கைக்கு ஆதரவாக ‘வா வா வந்து கையெழுத்து போடு’ என இழுப்பதை ஏற்க முடியாது.

இதெல்லாம் குழந்தைகளை அச்சுறுத்துவது என்றேதான் பார்க்கவேண்டி உள்ளது. துறை அமைச்சராக இதை கடுமையாக கண்டிக்கிறேன்; புகாரின்பேரில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment