Join THAMIZHKADAL WhatsApp Groups
ஜாக்டோ - ஜியோ ( JACTTO - GEO )
13.03.2025 மீண்டும் ஜாக்டோ - ஜியோவை பேச்சுவார்த்தைக்கு அழைத்து மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மூன்று குழுக்களாக சுமார் 20 நிமிடம் பேச்சுவார்த்தை நடத்தி பட்ஜெட் நிதிநிலை அறிக்கையில் எங்களது கோரிக்கைகள் குறித்து உதாரணமாக , பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் , சரண் விடுப்பை மீண்டும் அமல்படுத்துவது , தொகுப்பூதிய ஊழியர்களை காலமுறை ஊதியத்தில் வரைமுறைப்படுத்துவது.
ஆசிரியர்களுக்கான பதவி உயர்வுகள் , ஊதிய முரண்பாடுகளை களைவது மற்றும் காலிப்பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகள் குறித்து விரிவாக பேசி நம்பிக்கை அளித்தார் . ஆகவே நடப்பு பட்ஜெட்டில் 12 லட்சம் அரசு ஊழியர் , ஆசிரியர் , அரசுப் பணியாளர்களின் கோரிக்கைகள் நிறைவேறும் என எதிர்பார்த்து காத்திருந்தோம் . ஆனால் 2025-2026 பட்ஜெட் அறிவிப்பில் எங்கள் எதிர்பார்ப்புகள் ஏமாற்றமானது . எங்கள் கோரிக்கைகள் கேள்விக்குறியானது.
ஆகவே 14.03.2025 நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் லட்சக்கணக்கான அரசு ஊழியர் , ஆசிரியர் , அரசுப் பணியாளர்களின் உணர்வு மட்டத்தை அறிந்து 23.03.2025 அன்று மாவட்ட தலைநகரங்களில் உண்ணாவிரதம் நடவடிக்கைக்கு செல்வதென முடிவாற்றப்பட்டது . அப்போராட்டத்தில் அரசு ஊழியர்கள் , ஆசிரியர்கள் . அரசுப் பணியாளர்கள் தமிழகம் முழுவதும் இரண்டு லட்சத்திற்கும் மேலாக எழுச்சிகரமாக பங்கேற்று தங்களது கோபத்தை வெளிப்படுத்தியுள்ளனர் அதனடிப்படையில் இன்று ( 08.04.2025 ) நடைபெற்ற மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதிக்கப்பட்டு கீழ்க்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டது.
10 முதல் 15 ஆண்டுகள் தின ஊதியம் மற்றும் தற்காலிக பணியாளர்கள் நிலைமை அவ்வளவு தானா நிரந்தரபணி வாய்ப்பு எனபதே இல்லையா 15 ஆண்டுகள் கழிந்த நிலையில் எங்களது வயது இபொழுது 40 கடந்துவிட்டது இப்பொழுது எங்கும் எங்களால் கூலி வேலைக்கு கூட செல்ல இயலாதே
ReplyDelete