Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, May 31, 2025

2 ஆம் வகுப்புக்குப் பிறகு இன்ஜினியரிங் படிக்க போறீங்களா..?? அப்போ இந்த பிரிவு பற்றி கண்டிப்பா தெரிஞ்சுக்கோங்க..!!

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
தமிழகத்தில், கடந்த மார்ச் மாதம் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெற்றது. இதை தொடர்ந்து, தேர்வுக்கான முடிவுகள் மே 8 ஆம் தேதி அன்று வெளியான நிலையில் மாணாக்கர்கள் உயர்கல்வி கற்க கல்லூரிகளில் விண்ணப்பித்து வருகின்றனர். அந்த வகையில் அறிவியல் பிரிவு மாணவர்களுக்கு இன்ஜினியரிங் (B.Tech) படிப்பு ஒரு நல்ல தேர்வாக இருந்தாலும் எந்தப் பிரிவைத் தேர்ந்தெடுப்பது என்பதில் குழப்பம் இருக்கும். இது குறித்து இப்பதிவில் விரிவாக காண்போம்.

அதாவது, “இன்ஜினியரிங் பிரிவுகளில் ஒன்றான விண்வெளி பொறியியல் (Aerospace Engineering) என்பது விண்வெளி தொழில்நுட்பத்துடன் தொடர்புடையது. இந்த பாடப்பிரிவு விண்வெளி வாகனங்களை வடிவமைத்தல், விண்வெளி ஆராய்ச்சி மற்றும் விண்வெளிப் பயணங்களை எளிதாக்குதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டது”. மேலும், விண்வெளி பொறியியல் துறை மூலம் NASA, ISRO போன்ற விண்வெளி ஆராய்ச்சி நிறுவனங்கள் மற்ற கிரகங்களில் உயிரினங்களைத் தேடுவதிலும், விண்வெளி சுரங்கத்திலும் ஈடுபட்டு வருகின்றன. இந்த செயல்பாடுகள் விண்வெளி பொறியாளர்களுக்கு அதிக தேவையை உருவாக்குகின்றன. “இந்த பட்ட படிப்பிற்கு, 12 ஆம் வகுப்பில் இயற்பியல், வேதியியல் மற்றும் கணிதப் பாடங்களில் குறைந்தபட்சம் 75% மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும் என்றும், JEE Main மற்றும் JEE Advanced தேர்வுகளில் நல்ல மதிப்பெண் பெறுவதும் அவசியம் என கூறப்பட்டுள்ளது. இத்துறையில் IIT Madras, IIT Bombay, IIT Kanpur, BITS Pilani மற்றும் சில தனியார் பல்கலைக்கழகங்கள் சிறந்த கல்லூரிகளாகும்” என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News