Join THAMIZHKADAL WhatsApp Groups
பிளஸ்-2 முடிக்கும் மாணவ-மாணவிகள் வழக்கமான பொறியியல், கலை, அறிவியல் படிப்புகள் மீது மட்டும் கவனம் செலுத்தாமல் அரிய சில தொழில்நுட்ப படிப்புகளையும் பரிசீலிக்கலாம்.
தற்போது, கடல்சார் படிப்புகள் (Marine studies) மற்றும் கப்பல்துறை அறிவியல் (Nautical Science) பட்டதாரிகளுக்குக் கப்பல்களில் வேலைவாய்ப்புகள் மிகுதியாக உள்ளன.
'நாட்டிகல்' என்றால் 'கடல்' என்று பொருள். கடல் சார்ந்த வேலையில், அதிக சம்பளம் கிடைக்கும்.
2. தேசிய கடல்சார் பல்கலைக்கழகம் (Indian Martime University-IMU)
சென்னையில் உள்ள இந்திய கடல்சார் பல்கலைக்கழகத்திலும், மும்பை, விசாகப்பட்டினம், கொச்சி ஆகிய இடங்களில் உள்ள அதன் வளாகங்களிலும் பிஎஸ்சி (நாட்டிக்கல் சயின்ஸ்), டிப்ளமோ நாட்டிக்கல் சயின்ஸ், பிஎஸ்சி (கப்பல் கட்டுதல்), பி.டெக். (மரைன் என்ஜினியரிங்) எம்.டெக். எம்பிஏ (துறைமுகம் மற்றும் கப்பல் மேலாண்மை) உள்பட பல்வேறு கடல்சார் தொழில்நுட்ப படிப்புகள் வழங்கப்படுகின்றன.
IMU CET: கடல்சார் படிப்புக்கான நுழைவுத்தேர்வு:
தேசிய கடல்சார் பல்கலைக்கழக படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வுக்கு வரும் ஏப்ரல் முதல் வாரத்தில் நடைபெறும். அதிகாரப்பூர்வமான அறிவிப்பு மார்ச் மாதத்தில் வெளியாகும்.
இவற்றில் சேருவதற்கான IMU CET எனப்படும், தேசிய நுழைவுத் தேர்வு, வரும் ஜூன் முதல் வாரத்தில் சென்னை, கோவை உள்பட நாடு முழுவதும் பல்வேறு முக்கிய நகரங்களில் நடத்தப்பட உள்ளது.
நுழைவுத் தேர்வில் பங்கேற்க விரும்புவோர் www.imu.edu.in என்ற, இணையதள முகவரி மூலம் ஏப்ரல் முதல் ஆன்லைனில் விண்ணப்பிக்கலாம். டிப்ளமா மற்றும் பட்டப் படிப்புகளுக்கு பிளஸ் டூ மாணவர்களும், முதுநிலை படிப்புகளுக்கு பட்டதாரிகளும் விண்ணப்பிக்கலாம்.
2. மத்திய அரசின் கடல் சார் மீன்வள தொழில்நுட்ப நிறுவனம் (Central Institute of Fisheries Nautical and Engineering Training-CIFNET)
மீன்பிடி சார்ந்த பல்வேறு தொழில்நுட்பப் படிப்புகளை வழங்கிவருகிறது. கேரள மாநிலம் கொச்சியைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் சிப்நெட் நிறுவனத்துக்குச் சென்னை ராயபுரத்திலும் ஆந்திரா மாநிலம் விசாகப்பட்டினத்திலும் கல்வி வளாகங்கள் உள்ளன. சிப்நெட் வழங்கும் படிப்புகளில் முக்கியமானது பி.எப்.எஸ்சி. நாட்டிக்கல் சயின்ஸ் (B. F. Sc. Nautical Science).
மத்தியக் கப்பல் துறை இயக்குனரகத்தின் அனுமதி பெற்ற நாட்டிக்கல் சயின்ஸ் பட்டப் படிப்பு சிப்நெட் தலைமையகமான கொச்சியில் வழங்கப்படுகிறது. படிப்புக் காலம் 4 ஆண்டுகள். இப்படிப்பில், பிளஸ்-2 முதல் குரூப் (கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல்) எடுத்துப் படித்தவர்கள் சேரலாம். பிளஸ்-2 அல்லது எஸ்.எஸ்.எல்.சி. தேர்வில் குறைந்தபட்சம் 50 சதவீத மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். பிளஸ்-2 மதிப்பெண், நுழைவுத்தேர்வு மதிப்பெண், நேர்முகத் தேர்வு ஆகியவற்றின் அடிப்படையில் மாணவ-மாணவிகள் சேர்க்கப்படுகிறார்கள். நுழைவுத் தேர்வில் கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், ஆங்கிலம் ஆகிய பாடங்களில் இருந்து அப்ஜெக்டிவ் முறையில் கேள்விகள் கேட்கப்படுகின்றன. தவறான விடைகளுக்கு மைனஸ் மதிப்பெண் உண்டு.
நாட்டிக்கல் சயின்ஸ் படிப்புக்கு மொத்தம் 20 இடங்கள் உள்ளன. இந்தப் படிப்பை முடிப்பவர்கள் தேவையான கடல் அனுபவம் பெற்றிருந்தால் அவர்கள் எழுத்துத் தேர்வு எதுவும் இல்லாமல் மேட் பிஷ்ஷிங் வெசல் (Mate Fishing Vessel) நேர்முகத் தேர்வில் நேரடியாகக் கலந்துகொள்ளலாம். இதில் வெற்றிபெற்றால் Certificate of Competency in Mate of Fishing Vessel சான்றிதழ் வழங்கப்படும்.
விண்ணப்பம் கிடைக்குமிடம்: கொச்சியில் உள்ள சிப்நெட் தலைமையகம், சென்னை ராயபுரத்தில் உள்ள சிப்நெட் வளாகம், சிப்நெட் இணையதளம் (www.cifnet.gov.in).
அனுப்ப வேண்டிய முகவரி:
Central Institute of Fisheries Nautical and Engineering Training, (C I F N E T),
Dewan's Road,
Kochi - 682 016
Kerala
நுழைவுத்தேர்வு நாள்: ஜூன் 2022
நுழைவுத் தேர்வு மையங்கள்: கொச்சி, சென்னை, விசாகப்பட்டினம்
இத்தேர்வில் வெற்றிபெறு வோருக்கு ஜூலை ல் நேர்முகத் தேர்வு நடத்தப்படும். இறுதியாகத் தேர்வுசெய்யப்படுவோருக்கு வகுப்புகள் ஜூலை இறுதியில் தொடங்கும்.
எஸ்சி, எஸ்டி, ஓபிசி மாணவ-மாணவிகளுக்கு மத்திய அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
பி.எப்.எஸ்சி. நாட்டிக்கல் சயின்ஸ் பட்டம் பெற்றவர்கள், மீன்பிடிக் கப்பல் இயக்கம் மற்றும் மீன்பிடி ஆராய்ச்சி தொடர்பான மத்திய மீன்பிடி நிறுவனங்களிலும், மாநில அரசின் மீன்வளத் துறையிலும் அரசுப் பணிகளில் சேரலாம். தனியார் மீன்பிடிக் கப்பல்களிலும் வேலைவாய்ப்புகள் ஏராளமாகக் காத்திருக்கின்றன. ரூ. 60 ஆயிரம் முதல் ரூ.1.5 லட்சம் வரை சம்பளம் கிடைக்கும். சம்பளம் தவிர, ஊக்கத் தொகை உள்பட ஏராளமான சலுகைகளும் உண்டு. அட்மிஷன் நடைமுறை, நுழைவுத் தேர்வு, பயிற்சித் திட்டம் தொடர்பான விவரங்களை சிப்நெட் இணையதளத்தில் விரிவாக அறிந்துகொள்ளலாம்.
No comments:
Post a Comment