Friday, June 13, 2025

10th Tamil – அன்னை மொழியே வினா விடைகள்

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

நூல் வெளி

  • பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரை. மாணிக்கம்.
  • தென்மொழி, தமிழ்ச்சிட்டு இதழ்களின் வாயிலாக தமிழ் உணர்வை உலகம் முழுவதும் பரப்பியவர்.
  • உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, கனிச்சாறு, பள்ளிப்பறைவைகள் என்பன பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் ஆகும்.
  • இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது.
  • இவரது நூல்கள் நாட்டுமையாக்கப்பட்டுள்ளன.

பாட நூல் மதிப்பீட்டு வினா




பலவுள் தெரிக

எந்தமிழ்நா என்பதைப் பிரித்தால் இவ்வாறு வரும்

  1. எந் + தமிழ் + நா
  2. எந்த + தமிழ் + நா
  3. எம் + தமிழ் + நா
  4. எந்தம் + தமிழ் + நா

விடை : எம் + தமிழ் + நா

குறு வினா

“மன்னும் சிலம்பே! மணிமே கலைவடிவே!
முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!” – இவ்வடிகளில் இடம்பெற்றுள்ள ஐம்பெருங் காப்பியங்களைத் தவிர எஞ்சியுள்ள காப்பியங்களின் பெயர்களை எழுதுக.

  • சீவகசிந்தாமணி
  • வளையாபதி
  • குண்டலகேசி

இவையாவும் எஞ்சிய ஐம்பெருங்காப்பியங்கள் ஆகும்

சிறு வினா

தமிழன்னையை வாழ்த்துவதற்கான காரணங்களாகப் பாவலரேறு சுட்டுவன யாவை?

“அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!
முன்னைக்கும் முன்னை முகிழ்த்த நறுங்கனியே!”

  • அன்னை மொழியே! அழகான செந்தமிழே!
  • பழமைக்குப் பழமையாய்த் தோன்றிய நறுங்கனியே!
  • குமரிக்கண்டத்தில் நிலைபெற்று அரசாட்சி செலுத்திய மண்ணுலகப் பேரரசே!
  • பாண்டியனின் மகளே! திருக்குறளின் பெரும் பெருமைக்குரியவளே!
  • பாட்டும், தொகையும் ஆனவளே! பதினெண்கீழ்க்கணக்கே! நிலைத்த சிலப்பதிகாரமே! அழகான மணிமேகலையே!
  • கடல் கொண்ட குமரியில் நிலையாய் நின்று அரசாட்சி செய்த பெருந்தமிழ் அரசே!
  • பொங்கியெழும் நினைவுகளால் தலை பணிந்து தமிழே உன்னை வாழ்த்துகின்றோம்

“முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே!”

நெடு வினா

மனோன்மணீயம் சுந்தரனாரின் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலையும் பெருஞ்சித்திரனாரின் தமிழ் வாழ்த்தையும் ஒப்பிட்டு மேடைப்பேச்சு ஒன்றை உருவாக்குக.

அறிமுக உரை:-

தாயே! தமிழே! வணக்கம்,

தாய் பிள்ளை உறவம்மா, உனக்கும் எனக்கும்.

என்று தமிழ்த்தாயை வணங்கி, இங்கு மனோன்மணீயம் சுந்தரனாரின் பாடலையும், பெருஞ்சித்தரனாரின் பாடலையும் ஒப்பிட்டுக் காண்போம்.

சுந்தரனார்பெருஞ்சித்திரனார்
நீர் நிறைந்த கடலை ஆடையாக உடுத்திய பெண்ணாக பூமியையும்,

பாரதத்தை முகமாகவும், பிறை போன்ற நெற்றியாகவும்,

நெற்றியில் இட்ட பொட்டாக தமிழும்,

தமிழின் மணம் எத்திசையும் வீசுமாறு உருவகப்படுத்திப் பாடியுள்ளார் சுந்தரனார்

குமரிக்கண்டத்தில் நின்று நிலைபெற்ற மண்ணுலகம் போற்ற வாழ்ந்த பேரரசியே!

பழமைக்கு பழமையானவளே!

பாண்டியனின் மகளே! திருக்குறளின் புகழே!

பாட்டுத்தொகையே! கீழ்கணக்கே! சிலம்பே! மேகலையே! என்று பெருங்சித்திரனார் தமிழை முடிதாழ வணங்கி வாழ்த்துகிறார்.

“நீராருங் கடலுடுத்த நிலமடந்தைக் கெழிலொழுகும்….”“அன்னை மொழியே! அழகார்ந்த செந்தமிழே!”

நிறைவுரை:-

இருவருமே தமிழின் பெருமையைத் தம் பாடல்களில் பூட்டி, காலந்தோறும் பேசும்படியாக அழகுற அமைத்துப் பாடியுள்ளார்.

கூடுதல் வினாக்கள்

இலக்கணக் குறிப்பு

  • செந்தமிழ், நறுங்கனி, பேரரசு, செந்தாமரை – பண்புத்தொகைகள்
  • பாடி, குடித்து – வினையெச்சங்கள்

பகுபத இலக்கணம்

முகிழ்த்த = முகிழ் + த் + த் + அ

  • முகிழ் = பகுதி
  • த் – சந்தி
  • த் – இறந்தகால இடைநிலை
  • அ – பெயரெச்ச விகுதி

பலவுள் தெரிக

1. ஐம்பெருங்காப்பியங்களுள் பொருந்தாததைத் தேர்க

  1. யசோதர காவியம்
  2. சிலப்பதிகாரம்
  3. மணிமேகலை
  4. சீவகசிந்தாமணி

விடை : யசோதர காவியம்

2. உள்ளத்தில் கனல் மூள செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்து பாடியது ……………………

  1. தேன்சிட்டு
  2. தேனீ
  3. வண்டு
  4. வண்ணத்துப்பூச்சி

விடை : வண்டு

3. அன்னைமொழியே என்ற கவிதையில் இடம்பெறும் மூவேந்தர்களில் ஒருவர் 

  1. சேரன்
  2. சோழன்
  3. பாண்டியன்
  4. பல்லவன்

விடை : பாண்டியன்

4. பொருந்தாற்றைக் கண்டறிக

  1. பாவியக்கொத்து
  2. தென்தமிழ்
  3. நூறாசிரியம்
  4. பள்ளிப்பறவைகள்

விடை : தென்தமிழ்

4. பொருந்தாற்றைக் கண்டறிக

  1. பள்ளிப்பறவைகள்
  2. எண்சுவை எண்பது
  3. உலகியல் நூறு
  4. தமிழ்ச்சிட்டு

விடை : தமிழ்ச்சிட்டு

5. அன்னை மொழியே கவிதை நூல் இடம் பெறும் நூல்

  1. பாவியக்கொத்து
  2. கனிச்சாறு
  3. நூறாசிரியம்
  4. பள்ளிப்பறவைகள்

விடை : கனிச்சாறு

6. முன்னும் நினைவால் முடிதாழ வாழ்த்துவமே என்று பாடியவர்

  1. பெருஞ்சித்திரனார்
  2. க. சச்சிதானந்தன்
  3. வாணிதாசன்
  4. கண்ணதாசன்

விடை : பெருஞ்சித்திரனார்

7. முந்துற்றோம் யாண்டும் முழங்கத் தனித்தமிழே என்று பாடியவர்

  1. க. சச்சிதானந்தன்
  2. வாணிதாசன்
  3. கண்ணதாசன்
  4. துரை. மாணிக்கம்

விடை : துரை. மாணிக்கம்

8. “நற்கணக்கே என்பதில் சுட்டப்டும் நூல்கள் எத்தனை?

  1. 5
  2. 8
  3. 10
  4. 18

விடை : 18

9. மன்னும் சிலம்பே! மணிமேகலை வடிவே! எஞ்சியுள்ள பெருங்காப்பியங்கள் ……………

  1. 5
  2. 4
  3. 3
  4. 2

விடை : 2

10. துரை மாணிக்கம் என்ற இயற்பெயர் கொண்டவர் ……………

  1. பெருஞ்சித்திரனார்
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. சுரதா

விடை : பெருஞ்சித்திரனார்

11. பெருஞ்சித்திரனார் பழமைக்குப் பழமை என்னும் பொருள் தரும் சொல் ……………

  1. முன்னைக்கும் முன்னை
  2. முன்னை முகிழ்ந்த
  3. முன்னும் நினைவால்
  4. முந்துற்றோம் யாண்டும்

விடை : முன்னைக்கும் முன்னை

12. பாப்பத்தே எண் தொகையே சரியான பொருள் ……………

  1. பா பத்து, எண் தொகை
  2. பத்துப்பாட்டு, எட்டுத்தொகை
  3. பா பத்து, எட்டுத்தொகை
  4. பத்தும் எட்டும்

விடை : பத்துப்பாட்டு, எட்டுத்தொகை

13. பெருஞ்சித்திரனாரின் முந்துற்றோம் யாண்டும்தமிழ்த்தாய் வாழ்த்து என்னும் இரு தலைப்பிலுள்ள பாடல்கள் எத்தொகுப்பிலிருந்து எடுத்தாளப் பெற்றன?

  1. எண்சுவை எண்பது
  2. உலகியல் நூறு
  3. கனிச்சாறு
  4. நூறாசிரியம்

விடை : கனிச்சாறு

14. செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகார்ந்த அந்தும்பி பாடும் அதுபோல பயின்று வரும் அணி

  1. உவமையணி
  2. உருவக அணி
  3. எடுத்துக்காட்டு உவமையணி
  4. பொருள் பின்வரு நிலையணி

விடை : உவமையணி

15. செந்தமிழ் பிரித்து எழுதுக.

  1. செந் + தமிழ்
  2. செம் + தமிழ்
  3. செ + தமிழ்
  4. செம்மை + தமிழ்

விடை : செம்மை + தமிழ்

16. அன்னை மொழியே என்னும் தமிழ்த்தாய் வாழ்த்தின் ஆசிரியர் ……………

  1. பெருஞ்சித்திரனார்
  2. பாரதியார்
  3. பாரதிதாசன்
  4. சுரதா

விடை : பெருஞ்சித்திரனார்

17. சாகும் போதும் தமிழ் படித்துச் சாக வேண்டும் – என்றன் சாம்பலும் தமிழ் மணந்து வேக வேண்டும் என்று பாடியவர் …………….

  1. பெருஞ்சித்திரனார்
  2. பாரதியார்
  3. சச்சிதானந்தன்
  4. சுரதா

விடை : சச்சிதானந்தன்

18. பெருஞ்சித்திரனாரின் பணிகளில் தமிழுக்குக் கருவூலமாய் அமைந்த நூல் …………

  1. எண்சுவை எண்பது
  2. உலகியல் நூறு
  3. நூறாசிரியம்
  4. திருக்குறள் மெய்ப்பொருளுரை

விடை : திருக்குறள் மெய்ப்பொருளுரை

19. தென்மொழி, தமிழ்ச்சிட்டு ஆகிய இதழ்களின் ஆசிரியர் …………..

  1. பெருஞ்சித்திரனார்
  2. பாரதியார்
  3. சச்சிதானந்தன்
  4. சுரதா

விடை : பெருஞ்சித்திரனார்

குறு வினா

1. பாவலரேறு பெருஞ்சித்திரனார் தமிழுணர்வை உலகம் முழுவதும் பரப்ப காரணமாக இருந்த நூல்கள் யாவை?

தென்மொழி, தமிழ்ச்சிட்டு

2. பாவலரேறு பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் எவை?

உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, கனிச்சாறு, பள்ளிப் பறைவைகள்

3. வண்டு – தேன், தமிழர் – தமிழ்ச்சுவை இவற்றை ஒப்பிட்டுப் பெருஞ்சித்திரனார் குறிப்பிடும் செய்தி யாது?

வண்டு – தேன்

உள்ளத்தில் கனல் மூள வண்டானது செந்தாமரைத் தேனைக் குடித்துச் சிறகசைத்துப்ப பாடுகின்றது.

தமிழர் – தமிழ்ச்சுவை

தமிழர் செந்தமிழைச் சுவைத்து தமிழின் பெருமையை எங்கு முழங்குகின்றனர்.

4. “அன்னை மொழியே” என்ற பாடலில் அமைந்துள்ள விளிச் சொற்களை எழுதுக.

செந்தமிழே!மாண்புகழே!
நறுங்கனியே!எண்தொகையே!
பேரரசே!நற்கணக்கே!
தென்னன் மகளே!சிலம்பே!

5. பதினெண் மேற்கணக்கு நூல்கள் யாவை?

எட்டுத்தொகை, பத்துப்பாட்டு

6. தமிழ் எவற்றின் காரணமாகத் தமக்குள் பற்றுணர்வை ஏற்படுத்துவதாகப் பெருங்சித்திரனார் கூறுகிறார்?

  • பழம்பெருமையும் தனக்கெனத் தனிச்சிறப்பும் இலக்கிய வளம் கொண்டது தமிழ்.
  • நீண்ட நிலைத்த தன்மை உடையது.
  • வேற்று மொழியார் தமிழைக் குறித்து உரைத்த புகழ் மொழிகள்.

ஆகிய இவையே தமக்குள் பற்றுணர்வை எற்படுத்துவதாகப் பெருஞ்சித்திரனார் கூறுகிறார்.

7. இன்னறும் பாப்பத்தே! எண் தொகையே! நற்கணக்கே! இவ்டியில் சுட்டப்படும் மொத்த நூல்கள் எத்தனை?

பாப்பத்தேபத்துப்பாட்டு10
எண் தொகைஎட்டுத்தொகை8
நற்கணக்குபதினெண்கீழ்கணக்கு18
மொத்த நூல்களின் எண்ணிக்கை36

சிறு வினா

பாவலரேறு பெருஞ்சித்திரனார் குறிப்பு வரைக

  • பாவலரேறு பெருஞ்சித்திரனார் இயற்பெயர் துரை. மாணிக்கம்.
  • இவரின் பெற்றோர் துரைசாமி – குஞ்சம்மாள் ஆவார்
  • இவர்  எழுதிய தென்மொழி, தமிழ்ச்சிட்டு நூல்கள் தமிழ் உணர்வை உலகம் முழுவதும் பரப்ப காரணமாக இருந்தன.
  • உலகியல் நூறு, பாவியக்கொத்து, நூறாசிரியம், எண்சுவை எண்பது, மகபுகுவஞ்சி, கனிச்சாறு, பள்ளிப்பறைவைகள் என்பன பெருஞ்சித்திரனாரின் படைப்புகள் ஆகும்.
  • இவரின் திருக்குறள் மெய்ப்பொருளுரை தமிழுக்கு கருவூலமாய் அமைந்தது.
  • இவரது நூல்கள் நாட்டுமையாக்கப்பட்டுள்ளன.
  • இவரது காலம் 10.03.1933 முதல் 11.06.1995 வரை
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application