Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Saturday, June 14, 2025

NEET 2025 - Results Published - Direct Download Link


நீட் தேர்வு முடிவுகள் இணையத்தில் வெளியிடப்பட்டது.

நாடு முழுவதும் கடந்த மே 4ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வு முடிவுகள் வெளியானது.

Result 👇👇👇



இளநிலை மருத்துவ படிப்புகளுக்கான சேர்க்கைக்கு அடிப்படையாக இருக்கும் நீட் தேர்வு முடிவுகள் இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது.

நாடு முழுவதும் 557 நகரங்களில் நடத்தப்பட்ட இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வினை 22.7 லட்சம் பேர் எழுதியிருந்தனர்.

www.neet.nta.nic.in என்ற இணையதளத்தில் நீட் தேர்வு முடிவுகளை மாணவர்கள் தெரிந்துகொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. நீட் தோ்வை தேசிய தோ்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

நாட்டில் உள்ள அரசு மற்றும் தனியாா் மருத்துவக் கல்லூரிகளில் உள்ள எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள் மற்றும் சித்தா, ஆயுா்வேதா, யுனானி, ஹோமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கு நீட் தோ்வு மூலம் மாணவா் சோ்க்கை நடத்தப்படுகிறது. மேலும் ராணுவக் கல்லூரிகளில் பிஎஸ்சி நா்சிங் படிப்புக்கு நீட் தோ்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

2025-26-ஆம் கல்வியாண்டுக்கான நீட் தோ்வு கடந்த மாதம் 4-ஆம் தேதி நாடு முழுவதும் நடைபெற்றது. இதை சுமாா் 22 லட்சம் மாணவா்கள் எழுதியிருந்தனர். தோ்வுக்கான தற்காலிக விடைக்குறிப்பு மற்றும் மாணவா்களின் விடைத்தாள் நகல்களை என்டிஏ http://neet.nta.nic.in என்ற இணையதளத்தில் வெளியிட்டு, தேர்வர்களின் ஆட்சேபனைகளைப் பெற்று பறிகு இறுதி விடைக் குறிப்புகள் வெளியிடப்பட்டிருந்தது.

இந்த நிலையில்தான் எப்போது வேண்டுமானாலும் நீட் தேர்வு முடிவுகள் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் சனிக்கிழமை பகல் 1 மணிக்கு நீட் தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளது

NEET 2025 RESULTS 👇👇👇👇

No comments:

Post a Comment