Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Tuesday, June 3, 2025

பள்ளிகள் திறப்பு - EMISல் செய்திட வேண்டிய மிக முக்கிய பணிகள்

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups
பள்ளிகள் திறக்க உள்ள நிலையில் EMISல் செய்திட வேண்டிய மிக முக்கிய பணிகள்

🌹1) தங்கள் பள்ளியில் உயர் வகுப்பில் பயின்று வரும் கல்வி ஆண்டுக்கு TC கொடுக்க உள்ள அனைத்து மாணவர்களுக்கும் TC பிரிண்ட் எடுத்து தயார் நிலையில் வைத்து இருக்க வேண்டும்

🌹2) TC கொடுக்க உள்ள மாணவர்கள் ஏற்கனவே Common pool அனுப்பி இருப்போம்! மற்ற வகுப்பு மாணவர்களை Promotion கொடுத்து அடுத்த வகுப்பிற்கு மாற்றம் செய்து பணிகளை முடித்து விடுங்கள்!! தொடக்க /நடுநிலை பள்ளிகளை பொறுத்தவரை ஒன்றாம் வகுப்பில் தற்போது எந்த ஒரு மாணவனும் இருக்க கூடாது.

🌹3) நாளை பள்ளியில் சேர்க்கும் மாணவர்களை உடனுக்குடன் EMIS இல் பதிவேற்றம் செய்திட வேண்டும்!! மேலும் ஏற்கனவே முதல் வகுப்பு சேர்க்கையில் Compaign உள்ள மாணவர்கள் தங்கள் பள்ளிக்கு வருகை தருவதை உறுதி செய்து கொண்டு அவர்களையும் முறையாக EMIS இல் உள்ளீடு செய்திடுங்கள்!!

🌹4) அனைத்து நலத்திட்டங்களையும் நாளையே மாணவர்களுக்கு வழங்கி பதிவேட்டில் மாணவர்களிடம் கையொப்பம் பெற்று விடுங்கள்!! நல த்திட்டங்கள் வழங்கப்பட்ட விவரத்தை EMIS இல் உடனுக்குடன் பதிவு செய்து விடுங்கள்!!

🌹5) வகுப்பு ஆசிரியர்கள் பணிமாறுதல் /பணிநிறைவு பெற்று இருப்பின் அவர்களுக்கு பதில் வேறு ஆசிரியரை வகுப்பு ஆசிரியராக EMIS இல் மாற்றம் செய்து விடுங்கள்!

🌹6) நாளைய தேதியில் தலைமை ஆசிரியர் பணியிடம் காலியாக உள்ள பள்ளிகளுக்கு உரிய உயர் அலுவலர் EMIS Login மூலம் பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு புதிய Emis ID உருவாக்கிட உடனே ஏற்பாடு செய்திடுங்கள்(ஏற்கனவே பொறுப்பு தலைமை ஆசிரியருக்கு புதிய ID பெற்றவர்கள் தவிர)

🌹7) ஜூன் 13 ஆம் தேதிக்குள் தங்கள் பள்ளியில் சேர்ந்த மாணவர்களை EMIS இல் அவசியம் உள்ளீடு செய்திடுங்கள்!

🌹8) EMIS இல் உள்ள விவரப்படி உயர் அலுவலர்கள் EMIS Login மூலம் மாணவர்கள் எண்ணிக்கை மற்றும் பெறப்பட்ட விலையில்லா பாடநூல்கள் &பாடக்குறிப்பேடுகள் விவரம் சரி பார்க்க உள்ளதால் அவசியம் EMIS இல் உள்ள மாணவர்கள் எண்ணிக்கையும் மாணவர்கள் வருகை பதிவேட்டில் உள்ள விவரமும் மிக சரியாக இருக்க வேண்டும் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்!!

நன்றி 🙏🙏

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News