Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, July 4, 2025

Surrender GO - 01.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம் - அரசாணை வெளியீடு.

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Groups


கோவிட் -19 பெருந்தொற்றுக் காலத்திலே , அரசின் நிதிநிலையின் மீது ஏற்பட்ட பெரும் சுமையின் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த அரசு அலுவலர்களுக்கான ஈட்டிய விடுப்பு சரண் செய்யும் நடைமுறையை , 0104.2026 முதல் , 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறும் வகையில் மீண்டும் செயல்படுத்திட 2025-2026 - ஆம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு வெளியிடப்பட்டது . இருந்தாலும் , அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்கள் இந்த அறிவிப்பை . இந்த ஆண்டே செயல்படுத்திட கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.

அரசு அலுவலர்கள் மற்றும் ஆசிரியர்களுடைய கோரிக்கையைப் பரிசீலித்து , ஈட்டிய விடுப்பு நாட்களில் , 15 நாட்கள் வரை 01.10.2025 முதல் சரண் செய்து பணப்பயன் பெறலாம்.-

Fundamental Rules - Tamil Nadu Leave Rules , 1933 - Restoring the System of Periodical Surrender of Earned Leave for encashment to the Government Employees Orders - Issued

👇👇👇

EL Surrender GO 35 , Date : 30.6.2025 - Download here

சரண்டர் ஊதியம். G.O.35 date: 30.06.25.

1). *01.10.25 முதல் சரண்டர் கிளைம் கீழ்கண்ட நிபந்தனைகளுடன் பெறலாம்.

*1.4.2020 ல் சரண்டர் செய்தவர்கள் 1.4.26 அன்று சரண்டர் கிளைம் பெறலாம்.

*15.10.2019 ல் சரண்டர் செய்தவர்கள் 15.10.2025 அன்று சரண்டர் கிளைம் பெறலாம்.

2). *-27.04.2020 முதல் 30.09.2025 முடிய நியமனம் பெற்றவர்கள் கீழ்க்கண்டவாறு விண்ணபிக்க வேண்டும்...

*Oct, Nov, Dec ஆகிய மாதங்களில் நியமனம் பெற்றவர்கள் 1.10.25 ல் சரண்டர் கிளைம் பெறலாம்.

*Jan, Feb, Mar ஆகிய மாதங்களில் நியமனம் பெற்றவர்கள் 1.1.26 ல் சரண்டர் கிளைம் பெறலாம்.

*Apr, May, June ஆகிய மாதங்களில் நியமனம் பெற்றவர்கள் 1.4.26 ல் சரண்டர் கிளைம் பெறலாம்.

*July, Aug, Sep ஆகிய மாதங்களில் நியமனம் பெற்றவர்கள் 1.7.26 ல் சரண்டர் கிளைம் பெறலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News