Thamizhkadal WhatsApp Channel

TNPSC தேர்வு 43,882 பேர் 'ஆப்சென்ட்'

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான டி.என்.பி.எஸ்.சி., சார்பில், 1,033 பணியிடங்களுக்கான, ஒருங்கிணைந்த தொழில்நுட்ப தேர்வு அறிவிப்பு, மே 21ல் வெளியிடப்பட்டது. மொத்தம், 92,509 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்தனர். அவர்களுக்கு பாடவாரியான போட்டி தேர்வு, கடந்த 4ம் தேதி முதல் 10ம் தேதி வரை நடந்தது.

தமிழ் மொழி தகுதி தேர்வு, பொது அறிவு, திறன் அறிவு தேர்வு, மொழிபெயர்ப்பு தேர்வு நேற்று காலை மற்றும் மாலையில் நடந்தது. தமிழகம் முழுதும் 92,509 பேர் தேர்வு எழுத விண்ணப்பித்த நிலையில், 48,627 பேர் மட்டுமே தேர்வு எழுதினர்.

மொத்தம், 43,882 பேர் தேர்வில் பங்கேற்கவில்லை. விண்ணப்பித்தவர்களில் 47.44 சதவீதம் பேர் தேர்வில் பங்கேற்காதது, கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

இது குறித்து, தமிழ்நாடு அனைத்து நிலைப்போட்டி தேர்வர்கள் சங்க தலைவர் கலீல் பாஷா கூறுகையில், “ஒருங்கிணைந்த தொழில்நுட்ப பணிகள் தேர்வில் தமிழ் மொழி தகுதி தேர்வை, 47 சதவீதம் பேர் எழுதாதது, டி.என்.பி.எஸ்.சி., நிர்வாகத்தின் மீது போட்டி தேர்வர்களுக்கு நம்பிக்கை இல்லாததை காட்டுகிறது,” என்றார்.
Share:

No comments:

Post a Comment

THAMIZHKADAL TODAY NEWS

Total Pageviews

Categories