Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, September 26, 2025

பள்ளிகளுக்கு காலாண்டு விடுமுறை அறிவிப்பு - விடுமுறை நாட்களில் சிறப்பு வகுப்பு நடத்துவதை முற்றிலும் தவிர்க்க பள்ளிக் கல்வி இயக்குநர் உத்தரவு!


பள்ளிக் கல்வித் துறையின் கீழ் செயல்படும் அனைத்து அரசு , அரசு உதவி பெறும் துவக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகள் காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து 06.10.2025 திங்கட் கிழமை அன்று திறக்கப்படும் என அறிவிக்கப்படுகிறது.

காலாண்டுத் தேர்வுகள் விடுமுறை முடிந்து பள்ளித் திறக்கும் நாள் அன்று 1 முதல் 7 வகுப்புகள் வரை பயிலும் மாணவர்களுக்கு இரண்டாம் பருவ பாடநூல் வழங்கப்பட உரிய நடவடிக்கை மேற்கொள்ள முதன்மைக் கல்வி அலுவலர்கள் மற்றும் மாவட்டக் கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் . காலாண்டு விடுமுறைக் காலங்களில் சிறப்பு வகுப்பு நடத்துவதை முற்றிலுமாக தவிர்க்கப்படவேண்டும்.

மேலும் விஜயதசமி அன்று அரசு , அரசு உதவி பெறும் துவக்க / நடுநிலை / உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு மாணவர்களின் சேர்க்கை நடபெற உரிய நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்ளப்படுகிறது . தங்கள் மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் மாணவர்களின் சேர்க்கை விவரங்களை EMIS கல்வித் தகவல் மேலாண்மை இணையதளத்தில் பள்ளியினால் உள்ளீடு செய்யப்பட்டு வருகின்றனவா என்பதை மேற்பார்வை செய்து தங்கள் மாவட்டத்தில் மொத்த மாணவர்களின் சேர்க்கை எண்ணிக்கையினை பள்ளிக் கல்வி இயக்குநரின் மின்னஞ்சலுக்கு அனுப்புமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .

No comments:

Post a Comment