Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, October 5, 2025

சென்னையில் பெல் நிறுவனத்தில் 610 பணியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் விண்ணப்பிங்க!


பெல் இந்தியா நிறுவனத்தில் அருமையான வேலை வாய்ப்பு; 610 காலியிடங்கள்; டிகிரி, இன்ஜினியரிங் உடனே அப்ளை பண்ணுங்க; தேர்வு முறை இதுதான்!


சென்னையில் உள்ள பெல் இந்தியா, 610 பயிற்சி பொறியாளர் பணியிடங்களுக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டுள்ளது. டிகிரி, இன்ஜினியரிங் படித்தவர்கள் இந்த அருமையான வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

மத்திய அரசின் நவரத்னா அந்தஸ்து உள்ள பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்று பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட். இந்த நிறுவனத்தில் டிரெய்னி இன்ஜினியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 610 காலியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்தப் பணியிடங்கள் தற்காலிக நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 07.10.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Trainee Engineer - I

காலியிடங்களின் எண்ணிக்கை: 610

Electronics - 301

Mechanical - 186

Electrical - 79

Computer Science and Engineering - 44

கல்வித் தகுதி: சம்பந்தப்பட்ட பிரிவுகளில் BE / B.Tech / B.Sc Engineering படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 01.09.2025 அன்று 28 வயதிற்கு உட்பட்டவர்கள் விண்ணப்பிக்கலாம். மத்திய அரசு விதிகளின்படி ஓ.பி.சி பிரிவினருக்கு 3 ஆண்டுகளும், எஸ்.சி, எஸ்.டி பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு 10 ஆண்டுகளும் வயது வரம்பில் தளர்வு உண்டு.

சம்பளம்

முதலாம் ஆண்டு ரூ. 30,000

இரண்டாம் ஆண்டு ரூ. 35,000

மூன்றாம் ஆண்டு ரூ. 40,000

தேர்வு செய்யப்படும் முறை: இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை: இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க https://jobapply.in/BEL2025BNGComplex என்ற இணையதளப் பக்கம் மூலமாக ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பக் கட்டணம்: பொதுப் பிரிவு, இ.டபுள்யூ.எஸ் மற்றும் ஓ.பி.சி பிரிவினருக்கு ரூ. 177, எஸ்.சி, எஸ்.டி, மாற்றுத்திறனாளி பிரிவினருக்கு விண்ணப்பக் கட்டணம் இல்லை.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 07.10.2025

No comments:

Post a Comment