Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Friday, October 17, 2025

தமிழகத்தில் 900 எம்.பி.பி.எஸ் சீட் அதிகரிப்பு; 3-வது ரவுண்ட் கட் ஆஃப் அதிரடியாக சரியுமா?


TN MBBS Admission: தமிழ்நாடு மருத்துவ கலந்தாய்வு 3 ஆம் சுற்றுக்கு கூடுதலாக 900 எம்.பி.பி.எஸ் இடங்கள் சேர்ப்பு; கட் ஆஃப் கணிசமாக குறைய வாய்ப்புள்ளதாக நிபுணர் கணிப்பு

தமிழ்நாடு மருத்துவ கவுன்சலிங்கின் மூன்றாம் சுற்று தொடங்க நிலையில், தமிழ்நாட்டில் 900 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் மூன்றாம் சுற்றுக்கான கட் ஆஃப் எந்த அளவிற்கு குறையும் என்பது குறித்து இப்போது பார்ப்போம்.

தமிழகத்தில் எம்.பி.பி.எஸ் மற்றும் பி.டி.எஸ் ஆகிய படிப்புகளின் மாணவர் சேர்க்கைக்கான கவுன்சலிங் நடைபெற்று வருகிறது. இதுவரை இரண்டு சுற்று கலந்தாய்வு நிறைவடைந்துள்ளது. இதனையடுத்து மூன்றாம் சுற்று கலந்தாய்வு தொடங்க உள்ளது.

இந்தநிலையில், தமிழ்நாட்டில் 900 எம்.பி.பி.எஸ் இடங்கள் அதிகரிக்கப்பட்டுள்ளன. இதனால் மூன்றாம் சுற்றுக்கான கட் ஆஃப் எந்த அளவிற்கு குறையும் என்பது குறித்து மிஸ்பா கேரியர் அகாடமி என்ற யூடியூப் சேனலில் கல்வி ஆலோசகர் டேனியல் பிரதீப் கூறியுள்ளார்.

அதன்படி, தமிழகத்தில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் இந்த ஆண்டு 900 இடங்கள் கூடுதலாக சேர்க்கப்படுவதாக தேசிய மருத்துவ ஆணையம் அறிவித்துள்ளது. இதில் 700 இடங்கள் தனியார் மருத்துவக் கல்லூரிகள் மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களிலும், 200 இடங்கள் நிகர்நிலை பல்கலைக்கழகங்களிலும் வரவுள்ளது. இதன் காரணமாக அகில இந்திய கவுன்சலிங்கிற்கு 200 இடங்களும், தமிழக மருத்துவ கவுன்சலிங்கிற்கு 700 இடங்களும் கூடுதலாக சேர உள்ளன.

கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்கள் வாரியான கூடுதல் இடங்களின் விபரம்

தனியார் கல்லூரிகள்

அன்னை மருத்துவக் கல்லூரி – 100

அருணை மருத்துவக் கல்லூரி – 50

பனிமலர் மருத்துவக் கல்லூரி – 50

சுவாமி விவேகானந்தா மருத்துவக் கல்லூரி – 50

செயிண்ட் பீட்டர்ஸ் மருத்துவக் கல்லூரி – 100

தாகூர் மருத்துவக் கல்லூரி – 100

தனியார் பல்கலைக்கழகங்கள்

ஸ்ரீ வெங்கடேஸ்வரா மருத்துவ பல்கலைக்கழகம் – 100

ஸ்ரீனிவாசன் மருத்துவ பல்கலைக்கழகம் – 100

தக்ஷஷிலா மருத்துவ பல்கலைக்கழகம் – 50

நிகர்நிலை பல்கலைக்கழகங்கள்

பாரத் பல்கலைக்கழகம் – 100

ஜே.ஆர் பல்கலைக்கழகம் – 50

லலிதாம்பிகை பல்கலைக்கழகம் – 50

ஒட்டுமொத்தமாக 900 எம்.பி.பி.எஸ் இடங்கள் சேர்க்கப்பட்டுள்ளதால், ஒவ்வொரு பிரிவினருக்கும் கட் ஆஃப் கணிசமாக குறையும்.

No comments:

Post a Comment