JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
காலாண்டு தேர்வில் மதிப்பெண் குறைந்த மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் நடத்துவது பற்றி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்த உள்ளதாக கல்வித்துறையினர் தெரிவித்தனர்.
தமிழகத்தில் காலாண்டு தேர்வு கடந்த மாதம் முடிந்தது. கடந்தவாரம் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட்டு தேர்வு முடிவுகள் மாணவர்களுக்கு தெரிவிக்கப்பட்டன. இதில் பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்களுக்கு அரசு பொதுத்தேர்விற்கு தயாரகும் வகையில் இப்போதே பாடங்களை நடத்த ஆசிரியர்கள் ஆயத்தமாகி வருகின்றனர். ஆனால், சில மாணவர்கள் காலாண்டுத்தேர்வில் மிககுறைந்த மதிப்பெண் பெற்றுள்ளனர்.
இவர்களும் பொதுத்தேர்வில் கூடுதல் மதிப்பெண் எடுக்க வைக்க கல்வித்துறை சார்பில் சிறப்பு வகுப்புகள் எடுக்கப்பட உள்ளது.
மேலும் குறைந்த மதிப்பெண் எடுத்து மாணவர்களை படிப்பில் கவனம் செலுத்த எவ்வித பயிற்சி வழங்கலாம் உள்ளிட்டவை பற்றி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுடன் ஆலோசனைக்கூட்டம் நடத்தப்பட உள்ளதாக கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்

No comments:
Post a Comment