Thursday, November 13, 2025

சிவில் சர்வீசஸ் மெயின் தேர்வு முடிவுகள் வெளியீடு: தேர்ச்சி பெற்ற 2,736 பேரில் 155 பேர் தமிழக மாணவர்கள்

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

ஐஏஎஸ், ஐஎப்​எஸ், ஐபிஎஸ் உள்​ளிட்ட பணி​களுக்​கான சிவில் சர்​வீசஸ் மெயின் தேர்வு முடிவு​களை யுபிஎஸ்சி வெளி​யிட்​டுள்​ளது. இதில் 2,736 பேர் தேர்ச்சி பெற்​றுள்​ளனர். இதில் 155 பேர் தமிழக மாணவர்​கள் ஆவர்.

ஐஏஎஸ், ஐஎப்​எஸ், ஐபிஎஸ், ஐஆர்​எஸ், ஐஐஎஸ் உள்பட 23 வித​மான மத்​திய அரசின் உயர் பதவி​களுக்​கான அதிகாரி​களை நேரடி​யாக நியமிக்​கும் வகை​யில் சிவில் சர்​வீசஸ் தேர்வு என்ற அகில இந்​திய அளவி​லான போட்​டித்​ தேர்வு ஆண்​டு​தோறும் நடத்​தப்​படு​கிறது. இத்​தேர்வை மத்​திய அரசு பணி​யாளர் தேர்​வாணை​யம் (யுபிஎஸ்​சி) நடத்​துகிறது. இது, முதல்​நிலைத் தேர்​வு, மெயின் தேர்​வு, ஆளு​மைத் திறன் தேர்வு என 3 நிலைகளை உள்​ளடக்​கியது.

அந்த வகை​யில் சிவில் சர்​வீஸ் பணி​களில் 979 காலி​யிடங்​களை நிரப்​புவதற்​காக யுபிஎஸ்சி முதல் ​நிலைத் தேர்வு கடந்த மே 25-ம் தேதி நடந்தது. இத்தேர்வை 6 லட்​சத்​துக்​கும் மேற்​பட்​டோர் எழு​தினர். தேர்வு முடிவு​கள் ஜூன் 11-ம் தேதி வெளி​யிடப்​பட்​டன. முதல்​நிலைத் தேர்​வில் 14,161 பேர் தேர்ச்சி பெற்​றனர். அவர்​களுக்​கான மெயின் தேர்வு கடந்த ஆக. 22 முதல் 31 வரை சென்னை உள்பட நாடு முழு​வதும் 24 முக்​கிய நகரங்​களில் நடந்​தது.

இந்​நிலை​யில், மெயின் தேர்வு முடிவு​களை யுபிஎஸ்சி தனது இணை​யதளத்​தில் வெளி​யிட்​டுள்​ளது. அதன்​படி, அடுத்​தகட்ட தேர்​வான ஆளு​மைத் திறன் தேர்​வுக்கு 2,736 பேர் தேர்வு செய்​யப்​பட்​டுள்​ளனர். அவர்​களில் 155 பேர் தமிழகத்​தைச் சேர்ந்​தவர்​கள். இவர்​களில் 87 பேர் தமிழக அரசின் அகில இந்​திய குடிமைப் பணி​கள் தேர்வு பயிற்சி மையத்​தில் படித்தவ​ர்கள் என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

ஆளு​மைத் திறன் தேர்வு நடை​பெறும் நாள் விவரம் விரை​வில் அறிவிக்​கப்​படும் என யுபிஎஸ்சி தெரி​வித்​துள்​ளது. இந்​தத் தேர்வு நடந்து முடிந்த பிறகு, மெயின் தேர்வு மதிப்​பெண், ஆளு​மைத் திறன் தேர்வு மதிப்​பெண் அடிப்​படை​யில் தரவரிசை பட்​டியல் தயாரிக்​கப்​பட்டு அதன்​பேரில் ஐஏஎஸ், ஐஎப்​எஸ், ஐபிஎஸ் மற்​றும் குருப்​-ஏ, குருப்​-பி பணி​களுக்கு தேர்​வர்​கள் ஒதுக்​கீடு செய்​யப்​படு​வர்​கள்​.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


DEPARTMENTAL EXAM DEC: 2020 | CODE: 065 | QUESTION PAPER WITH ANSWER

Kindly Request Your Friends to Subscribe Our Channel to get more Videos on All Exams Study Material

Tamilkadal Kalvi Tholaikatchi

THAMIZHKADAL Android Mobile Application