Breaking

Monday, December 8, 2025

ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் வேலை வாய்ப்பு; 300 பணியிடங்கள்


ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் நிறுவனத்தில் 300 நிர்வாக அலுவலர் பணியிடங்களை நிரப்புவதற்கான வேலை வாய்ப்பு அறிவிப்பு; தகுதி, தேர்வு முறை, விண்ணப்பிப்பது எப்படி? உள்ளிட்ட முழு விபரம் இங்கே

இந்தியாவின் பொதுத்துறை காப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான ஓரியண்டல் இன்ஸ்சூரன்ஸ் கம்பெனியில் (Oriental Insurance Company Limited) நிர்வாக அலுவலர் (Administrative Officer) இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. தற்போதைய அறிவிப்பில் நாடு முழுவதும் 300 காலிப் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 15.12.2025க்குள் விண்ணப்பித்துக் கொள்ளுங்கள்.

Administrative Officer

காலியிடங்களின் எண்ணிக்கை: 300

Generalist - 285

கல்வித் தகுதி: அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

Hindi Officers – 15

கல்வித் தகுதி: M.A Hindi படித்திருக்க வேண்டும்.

வயதுத் தகுதி: 21 முதல் 30 வயதிற்குள் இருக்க வேண்டும். இருப்பினும், எஸ்.சி, எஸ்.டி (SC/ST) பிரிவினருக்கு 5 ஆண்டுகளும், ஓ.பி.சி (OBC) பிரிவினருக்கு 3 ஆண்டுகளும் மாற்றுத்திறனாளி (PWD) பிரிவினருக்கு 10 ஆண்டுகளும், வயது சலுகை உண்டு.

சம்பளம்: 90,000

தேர்வு செய்யப்படும் முறை:

இதில் முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு என மூன்று படிநிலைகள் உண்டு. முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வுகள் அனைத்தும் கணினி வழி தேர்வுகளாக மட்டுமே நடைபெறும். எழுத்துத் தேர்வு கிடையாது.

முதல்நிலைத் தேர்வு:

முதல்நிலைத் தேர்வு 100 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம் (English language), திறனறிதல் (Reasoning ability) மற்றும் கணிதத்தில் (Numerical ability) இருந்து 100 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு ஒவ்வொரு பகுதிக்கும் 20 நிமிடங்கள் என மொத்தம் 1 மணி நேரம். முதல்நிலைத் தேர்வு தகுதித் தேர்வு மட்டுமே. முதல்நிலைத் தேர்வில் தகுதி பெறுவோர் முதன்மைத் தேர்வுக்கு அழைக்கப்படுவர்.

முதன்மைத் தேர்வு:

முதன்மைத் தேர்வு இரு பகுதிகளாக நடைபெறும். முதல் பகுதியில் கொள் குறி வகை வினாக்கள் அடங்கிய தேர்வு 250 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதில் ஆங்கிலம், திறனறிதல், கணிதம் மற்றும் பொது அறிவு அல்லது காப்பீடு தொடர்பான கேள்விகள் (Insurance and Financial Marketing Awareness) என மொத்தம் 250 கேள்விகள் இடம்பெறும். இந்த தேர்வுக்கான கால அளவு 3 மணி நேரம்.

அடுத்ததாக கட்டுரை மற்றும் கடிதம் எழுதுதல் தேர்வு நடைபெறும். இந்த தேர்வு 50 மதிப்பெண்களுக்கு நடைபெறும். இதற்கான கால அளவு 30 நிமிடங்கள்.

நேர்முகத் தேர்வு

முதன்மைத் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவர். முதன்மைத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களைக் கொண்டு இறுதி தேர்ச்சிப் பட்டியல் வெளியிடப்பட்டு, காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இந்த பணியிடங்களுக்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க முடியும். இதற்கு https://orientalinsurance.org.in/careers என்ற இணையதள பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி: 15.12.2025

விண்ணப்பக் கட்டணம்

இதற்கான விண்ணப்பக் கட்டணம் பொதுப் பிரிவு, ஓ.பி.சி (OBC) மற்றும் இ.டபுள்யூ.எஸ் (EWS) பிரிவினருக்கு ரூ.1000. எஸ்.சி, எஸ்.டி (SC/ST), மாற்றுத்திறனாளி (PWD) பிரிவுகளுக்கு ரூ.250.

இந்த வேலை வாய்ப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய https://orientalinsurance.org.in/careers என்ற இணையதளப் பக்கத்தில் கொடுக்கப்பட்டுள்ள அறிவிப்பினைப் பார்வையிடவும்.

No comments:

Post a Comment