JOIN OUR THAMIZHKADAL TECH SOCIAL MEDIAS





Sunday, January 18, 2026

ரேஷன் கார்டை ஆன்லைனில் எப்படி டவுன்லோடு செய்வது?

தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ், நாடு முழுவதும் உள்ள கோடிக்கணக்கான மக்களுக்கு ரேஷன் கார்டுகள் மூலம் மலிவான மற்றும் இலவச ரேஷன்களை மத்திய அரசு வழங்கி வருகிறது.

அதனுடன் மாநில அரசும் பல உதவிகளை செய்து வருகிறது. அந்த வகையில் நீங்கள் உங்களின் ரேஷன் கார்டை டிஜிட்டல் வடிவில் ஆன்லைனில் இருந்து டவுன்லோடு செய்ய விரும்பினால் கீழே கொடுக்கப்பட்டுள்ள தகவலை பின்பற்றவும். இதன் மூலம் நீங்கள் வீட்டில் இருந்த படியே எளிதாக உங்களின் ரேஷன் கார்டை டிஜிட்டல் வடிவில் ஆன்லைனில் இருந்து டவுன்லோடு செய்துக் கொள்ளலாம்.

இதற்கு முதலில் தமிழ்நாடு பொது விநியோகத் திட்டத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpds.gov.in என்ற பக்கத்திற்குச் செல்ல வேண்டும். இந்த பக்கத்தில் வலது இடத்தில் உள்ள "பயனாளி நுழைவு" என்கிற விருப்பத்தை கிளிக் செய்யவும்.

இதன் பின்னர் அங்கு உங்கள் ரேஷன் கார்டுடன் இணைக்கப்பட்ட பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணை உள்ளிட வேண்டும். இப்போது திரையில் தோன்றும் Captcha குறியீட்டைச் டைப் செய்து லாகின் செய்ய வேண்டும்.

இப்போது உங்கள் மொபைலுக்கு ஒரு OTP வரும். அதை உள்ளிட்டு பதிவு செய் என்கிற விருப்பத்தை கிளிக் செய்ய வேண்டும். உள்ளே உள் நுழைந்ததும் உங்கள் குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள் அடங்கிய பக்கம் திறக்கப்படும்.

இந்த பக்கத்தில் இடதுபுறத்தில் இருக்கும் மெனுவில் "Smart Card Print" என்கிற விருப்பத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும். இப்போது உங்கள் ஸ்மார்ட் கார்டின் மாதிரித் தோற்றம் திரையில் தெளிவாகத் தென்படும்.

இதில் கீழே உள்ள "Download PDF" அல்லது "Save" என்கிற பொத்தானை கிளிக் செய்யவும். இப்போது உங்கள் மொபைல் அல்லது கணினியில் ரேஷன் கார்டு பதிவிறக்கம் ஆகிவிடும்.

இதை நீங்கள் லேமினேட் செய்து அவசரத் தேவைகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். ஆன்லைனில் பதிவிறக்கம் செய்யப்படும் இந்த E-Ration Card அனைத்து தேவைகளுக்கும் அதிகாரப்பூர்வமான ஆவணமாக ஏற்றுக்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

நீங்கள் TNPDS இணையதளம் மட்டுமின்றி, TNPDS மொபைல் செயலியை பதிவிறக்கம் செய்தும் மேலே கொடுக்கப்பட்டுள்ள தகவலை உள்ளிட்டு ரேஷன் ஸ்மார்ட் கார்டைப் டவுன்லோடு செய்துக் கொள்ளலாம்.

தமிழகத்தில் மொத்தமாக ஐந்து வகையான ரேஷன் கார்டுகள் உள்ளன. அவை,

PHH - அரிசி உள்ளிட்ட அனைத்துப் பொருட்கள்.
PHH-AAY: அந்தியோதயா அன்ன யோஜனா (35 கிலோ அரிசி).
NPHH: அரிசி உள்ளிட்ட பொருட்கள்.
NPHH-S: சர்க்கரை மட்டும்.
NPHH-NC: பொருட்கள் இல்லாத அடையாள அட்டை மட்டும்.

நீங்கள் புதிய கார்டுக்கு விண்ணப்பித்திருந்தால், அதன் நிலையை பெற TNPDS இணையதளத்தில் "மின்னணு அட்டை விண்ணப்பத்தின் நிலை" என்பதை கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம்.

No comments:

Post a Comment